Farm Info

Friday, 02 September 2022 02:25 PM , by: R. Balakrishnan

Farmers

விருதுநகர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தீவன உற்பத்தி இயக்கத் திட்டத்தின் கீழ் முன்னோடி விவசாயிகளை கால்நடை தீவன பயிர் உற்பத்தியாளராக தொழில் முனையும் திட்டம் இந்த வருடம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் தீவனம் பற்றாக்குறையை போக்கவும் பசுந்தீவன உற்பத்தியை பெருக்கும் நோக்கத்திலும் ஒவ்வொரு வருடமும் மானியத்துடன் கூடிய பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

மானியம் (Subsidy)

தீவன பயிர் அறுவடை இயந்திரம் மற்றும் தீவனப் பயிர் புல் கட்டுகள் தயாரிக்கும் இயந்திரம்,டிராக்டர் ஆகியவற்ற 25% மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கும் திட்டத்தில் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன.

இந்த உபகரணங்களில் மொத்த விலை 42 லட்சம். இதில் பயனாளியின் பங்குத்தொகை 31.5 லட்சம் போக 10.5 லட்சம் ரூபாயை அரசு மானியமாக வழங்குகின்றது.

இந்த திட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள்,பால் பண்ணை உரிமையாளர்கள் மற்றும் சுய உதவி குழுவினர் விவசாய உற்பத்தி குழுக்கள் ஆகியவை விண்ணப்பிக்கலாம்.

இந்த திட்டம் தொடர்பாக தகுதியான நபர்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தகம் மற்றும் கால்நடை உதவி மருத்துவரின் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு! இந்தப் பயிர்களுக்கு காப்பீடு செய்யுங்கள்!

திண்டுக்கல் அருகே புடலங்காய் சாகுபடி: ஆர்வம் காட்டும் விவசாயிகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)