மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்ட மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
சர்ச்சை மசோதாக்கள்
மத்திய அரசு கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு வேளாண் மசோதாக்களை அறிமுகம் செய்தது. இவை இடைத்தரர்களும், கார்பரேட் கம்பெனிகளும் லாபம் அடையும் வகையிலும், விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வகையிலும் இருப்பதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விவசாயிகள் எதிர்ப்பு (Farmers protest)
ஆனால் அரசு இதனை செவிமடுக்க மறுத்தது. இதையடுத்து, சாலையில் இறங்கிப் போராட முன்வதந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியில், வெளிமாநில எல்லைகளை முடக்கினார், இதில், பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கில் பங்கேற்றனர்.
தடைகள் (Obstacles)
இருப்பினும் இந்தப் போராட்டத்தை முடக்க ஆரம்பம் முதலே மத்திய அரசு பல்வேறு யுக்திகளைக் கையாண்டது. பலத் தடைகளை உருவாக்கிய போதிலும், விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் பல மாதங்களாகத் தொடர்ந்த நிலையில், நீண்ட யோசனைக்குப் பிறகு தன் பிடிவாதத்தைக் கைவிட மோடி அரசு முன்வந்தது.
பிரதமர் அறிவிப்பு (Prime Minister's announcement)
இந்நிலையில் வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை திரும்பப் பெறுவதாகக் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி அறிவித்தார்.
மேலும் தற்போது நடைபெறும் குளிர் காலகூட்டத்தொடரில் இந்த மசோதாக்கள் ரத்து செய்வது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தின் குளிர் கால கூட்டத் தொடர், கடந்த நவ.,29 ம் தேதி துவங்கியது. முதல்நாளிலேயே குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்த சட்ட மசோதாக்கள் ரத்து செய்யப்பட்டன.
ஒப்புதல் (Approval)
இது குறித்த அரசாணையும் அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட வேளாண் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
போராட்டம் கைவிடப்படுமா? (Will the struggle be abandoned?)
மத்திய அரசின் முடிவிற்கு, குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதால், விவசாயிகள் தங்கள் போராட்டத்தை உடனடியாகக் கைவிடப்படுமா? கைவிட முன்வருவார்களா? அல்லது பேச்சுவார்த்தை நடத்தி அரசு உறுதி அளித்தபிறகே போராட்டத்தை நிறுத்திக்கொள்வார்களா? என்பது விரைவில் தெரியவரும்.
மேலும் படிக்க...
விவசாயிகள் தங்கள் பொருட்களை வெளிநாட்டில் எப்படி விற்கலாம்?
வேளாண்காடு வளர்ப்பு திட்டம்: விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள்!