விவசாய நகை கடனை முறையாக செலுத்திய விவசாயிகளுக்கு, 7 சதவீத வட்டியில் 3 சதவீதம் மானியமாக வழங்க நபார்டு வங்கி சார்பில் அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
விவசாய நகைக் கடன்
வேளாண் விவசாயிகளுக்கு அவசரத் தேவைக்கு 7 சதவீத வட்டியில், விவசாய நகை கடன் வழங்கப்படுகிறது. இதனை முறையாக திரும்ப செலுத்துவோருக்கு, மானியம் வழங்கப்படுகிறது. விவசாய நகை கடனுக்கான வட்டி விகிதத்தில் 5 சதவீதத்திற்கான வட்டி தொகையை வங்கிகளுக்கு, மத்திய அரசு வழங்குகிறது. ஆனால் கடந்த 2019ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில் அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை. எனவே, கடந்த 2019ஆம் ஆண்டு முதல் விவசாய நகை கடன்களுக்கு வழங்கப்பட்ட மானியம் நிறுத்தப்பட்டது.
கொரோனா 2வது அலை
இதனிடையே, கொரோனா 2ஆவது அலை காரணமாக விவசாய நகை கடன்களை முறையாக செலுத்த முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். நோய் பரவல் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பல்வேறு வகையில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் விவசாயிகள் முறையாக வட்டி கட்ட முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
3% வட்டி மானியம்
இந்நிலையில், கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் இம்மாதம் (ஜூன்) 30ஆம் தேதி வரையிலான தேதிகளில் நகை கடன்களுக்கான 7 சதவீத வட்டியில் 3 சதவீதம் மானியமாக வழங்க நபார்டு வங்கி சார்பில் அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, நகை கடனை முறையாக செலுத்தியவர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் 3 சதவீத வட்டித்தொகை மானியமாக, அவர்களது வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்படும் என்று நபார்டு வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க...
Online Ration Card: இப்போது நீங்கள் வீட்டில் இருந்தே ரேஷன் கார்டைப் பெறலாம், இங்கே எளிதான வழியை அறிந்து கொள்ளுங்கள்
மண்புழு உரக் கூடாரம் அமைக்க ரூ.50,000 மானியம்!