Farm Info

Thursday, 30 December 2021 10:44 PM , by: Elavarse Sivakumar

கூட்டுறவு வங்கிகளில் தங்க நகைக்கடன் வாங்கிய 48 லட்சம் பேரில், 35 லட்சம் பேரின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படாது என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.

எதிர்பார்ப்பு (Anticipation)

 திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி முக்கியமான ஒன்று. இந்த வாக்குறுதி, மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அறிவிப்பும் வெளியானது.
அரசின் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு, கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வாங்கியிருந்த ஏராளமானோருக்குப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த அறிவிப்பால் கூட்டுறவு வங்கிகளில் தாங்கள் வாங்கியிருந்த நகைக்கடனும் தள்ளுபடி செய்யப்படும் என்ற எதிர்பார்த்தனர்.

இந்த அறிவிப்பால் கூட்டுறவு வங்கிகளில் தாங்கள் வாங்கியிருந்த நகைக்கடனும் தள்ளுபடி செய்யப்படும் என்ற எதிர்பார்த்தனர்.

ஆய்வு

இந்நிலையில் நகைக்கடன் குறித்து தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் கூட்டுறவுத்துறை ஆய்வு மேற்கொண்டது. இதன் அடிப்படையில், நகைக்கடன் தள்ளுபடிக்கான புதிய நிபந்தனைகள் மற்றும் பட்டியலையும் கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ளது.

புதிய நிபந்தனைகள் (New terms)

  • நகைக்கடனை முழுமையாகச் செலுத்தியவர்களுக்கு தள்ளுபடி கிடையாது.

  • 40 கிராமுக்கு மேல் ஒரு கிராம் அதிகம் வைத்திருந்தாலும், தள்ளுபடி பொருந்தாது.

  • அரசு ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர், கூட்டுறவு சங்கத்தில் பணிபுரிபவர்களுக்கும் நகைக்கடன் தள்ளுபடி இல்லை.

  • ஆதார் எண்ணைத் தவறாக வழங்கியவர்கள், ரேசன் அட்டை வழங்காதவர்கள், வெள்ளை அட்டை உடையவர்களுக்கும் நகைக்கடன் தள்ளுபடி பொருந்தாது.

  • பொங்கலுக்கு முன்பு, அரசு விழாவில் தகுதியான 25 சதவீதம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு நகைகள் வழங்கப்படும்.

  • இதன் மூலம், நகைக்கடன் பெற்ற 48,84,726 பேரில் 35,37,693 பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படாது என்பது தெளிவாகியிருக்கிறது.

இவ்வாறுக் கூட்டுறுவுத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க...

நீங்க... இறந்துட்டீங்க...- ரேஷன் கடையில் அதிர்ச்சி சம்பவம்!

இந்தியாவில் சதம் அடித்தது ஒமிக்ரான் தொற்று!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)