இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 22 November, 2022 9:27 PM IST

கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு குறைந்த வட்டில் அதிக கடனுதவி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. விவசாயிகளின் வருமானத்தை ,இரட்டிப்பாக உயர்த்துவதற்காக மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இதற்காக பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதால், விவசாயிகள் பெரும் பயன் பெற்று வருகின்றனர். பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி என்ற திட்டம் அதில் மிக மிக முக்கியமான ஒரு திட்டமாகும்.

பிஎம் கிசான்

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மூன்று தவணையாக ரூ.2000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு ஆண்டுக்கு மொத்தம் 6000 ரூபாய் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரையில் 12 தவணைகள் வழங்கப்பட்டுவிட்டன. 13ஆவது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

​நிதியமைச்சர்

இதற்கிடையில், விவசாயிகளின் பொருளாதார நலனுக்காக ஒரு பெரிய விஷயத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது கூறியுள்ளார். கிராம மக்களின் வருமானத்தை அதிகரிக்க, கிசான் கிரெடிட் கார்டு (KCC) வைத்திருப்பவர்களுக்கு எளிதாகக் கடன் வழங்க வேண்டும் என்று பொதுத்துறை வங்கிகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் மூலம் விவசாயிகளுக்கு அதிகக் கடன்கள் கிடைக்கும் எனவும், அவர்களது வருமானம் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

​கிசான் கிரெடிட் கார்டு

விவசாயிகளின் அவசர தேவைக்காகக் கடன் பெறவும், விவசாயம் செய்ய உதவியாகவும் கிசான் கிரெடிட் கார்டு என்ற அட்டௌ வங்கிகள் தரப்பில் வழங்கப்படுகிறது. கிசான் கிரெடிட் கார்டு மூலம் உத்தரவாதமில்லா கடன்கள் குறைந்த வட்டியில் வழங்கப்படுகின்றன. கிசான் கிரெடிட் கார்டுகளுக்கான செயல்முறை கட்டணங்கள் உள்ளிட்ட பல்வேறு கூடுதல் கட்டணங்களை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

​குறைந்த வட்டியில்

இந்த கிசான் கிரெடிட் கார்டு குறைந்த வட்டியில் விவசாயக் கடன் வழங்குவதற்காக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு இதன் மூலம் 4 சதவீத வட்டிக்கு கடன் கொடுக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 2 சதவீத வட்டிக்குக் கூட கடன் வாங்கலாம்.

எப்படி ​விண்ணப்பிப்பது?

இணையதளத்தில் கிசான் கார்டுக்கான விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து அதைப் பூர்த்தி செய்த பின்னர் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். உங்களுக்கு விருப்பமான வங்கியைத் தேர்ந்தெடுத்து அந்த வங்கியில் விண்ணப்பிக்கலாம்.

ஆவணங்கள்

கிசான் கிரெடிட் கார்டு வாங்குவதற்கு நில ஆவணங்கள் மற்றும் பயிர் விவரங்களைச் சமர்ப்பித்து விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். இதுபோக நில ஆவணத்தின் நகலையும் சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் அட்டை, பான் கார்டு, 100 நாள் வேலைத் திட்டத்துக்கான அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஏதேனும் ஒரு ஆவணத்துடன் சேர்த்து, நில ஆவணங்கள், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ போன்ற ஆவணங்கள் தேவை.

மேலும் படிக்க...

ஆதார் அட்டைதாரர்களுக்கு ரூ.4.78 லட்சம்- விபரம் உள்ளே!

ஜெயலலிதா மரணம்: விசாரிக்கிறதா சிபிஐ?- சிக்குகிறார்கள் அவர்கள்!

English Summary: 4% interest loan for farmers!
Published on: 22 November 2022, 09:27 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now