புலி வருது, புலி வருதுன்னு நம்மில் பலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், உண்மையில் புலி வருவதைப் பார்க்க நேர்ந்தால், என்ன ஆகும்? உயிர் போகும் என்பதற்கு கூடலூரில் நிகழ்ந்த சம்பவங்களே சாட்சி.
புலியின் அட்டகாசம் (The roar of the tiger)
கிராமங்களை ஒட்டியுள்ள மலைப்பகுதிகளில் இருந்து எப்போதாவது தப்பிவரும் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது வாடிக்கை. அந்த வகையில் தற்போது கூடலூர் பகுதி கிராமமக்களை அச்சத்தில் உறைய வைத்திருருக்கிறது இந்தப்புலி.
காவு வாங்கியப் புலி
நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதியில் பதுங்கியுள்ள புலி, தற்போது, தேவர்சோலையில், தனியார் எஸ்டேட் தொழிலாளி சந்திரன், 51, என்பவரை, புலி தாக்கி கொன்றது.
மயக்க ஊசி (Anesthetic injection)
ஏற்கனவே இருவரையும், சில மாடுகளையும் கொன்ற புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில், வனத்துறையினர் ஈடுபட்டனர். அப்பகுதியில் ஏழு நாட்கள் தேடி வந்த நிலையில், புலி முதுமலை வழியாக, 30 கி.மீ. தொலைவில் உள்ள மசினகுடிக்கு வந்துள்ளது.
4 பேர் பலி (4 killed)
பகல் வேளையில், கல்குவாரி அருகே மாடு மேய்த்து கொண்டிருந்த குரும்பர்பாடியைச் சேர்ந்த மங்களபசுவன் என்ற 85வயது முதியவரைப் புலி தாக்கியதுடன், சில அடி தூரம் இழுத்துச் சென்றது. இதை நேரில் பார்த்த மக்கள் அலறியடித்து ஓடினர்.
தொடர்ந்து, ஒரு கையை இழந்த நிலையில் முட்புதரில் கிடந்த முதியவர் உடலை கண்டுபிடித்தனர். போலீசார், வனத்துறையினர் உடலை எடுக்க சென்றபோது பொதுமக்கள் தடுத்தனர்.
சுட்டுக்கொல்ல உத்தரவு (Order to shoot)
இதுவரை நான்கு பேரை கொன்ற புலியை சுட்டுக் கொல்லும் வரை உடலை எடுக்க அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்து, மசினகுடி பஸ் ஸ்டாண்ட் சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இறந்தவர் உடலை போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக எடுத்து வந்தனர்.
இத்துடன் 4 பேர் புலி தாக்கி பலியாகியிருப்பதால், அதனைச்
சுட்டுக்கொல்ல அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் படிக்க...
எங்களையும் தத்து எடுத்துக்கோங்க ப்ளீஸ்!
ரூ.2 லட்சத்தைப் பறித்தக் குரங்கு-பணமழை பொழிந்து அழிச்சாட்டியம்!