முதலீடு இல்லாமல் தொழில் தொடங்க நினைக்கிறீர்கள் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள யோசனைகளை பயன்படுத்தி எளிமையாக பணம் ஈட்டலாம். அதிலும் நீங்கள் விவசாயியாக இருந்தால் கண்டிப்பாக இந்த தொழிலை தொடங்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள யோசனைகள் தேவை வெளி நாடுகளில் அதிகம் உள்ளது.
ஆட்டு புழுக்கை (ஆட்டு சாணம்)
நமது வீட்டில் வளர்க்கப்படும் ஆடுகளின் புழுக்கை நமது வீட்டில் இருக்கும் செடிகளுக்கு உரமாக பயன்படுத்துகிறோம். ஆனால் சந்தையில் அதனுடைய தேவை அதிகமாக உள்ளது. உங்களிடம் இருக்கும் ஆட்டு புழுக்கையை மண் மற்றும் கற்கள் இல்லாமல் சுத்தம் செய்து அதனை பேக் செய்து அமேசான் நிறுவனத்திற்கு விற்கலாம் அல்லது இயற்கை பொருட்கள் அங்காடியும் அமைக்கலாம். வெளி மாநிலங்களில் இதனுடைய தேவை மிகவும் அதிகமாக உள்ளது.
முட்டை ஓட்டு தோல்
பொதுவாக முட்டையிலிருந்து கிடைக்கும் ஓடுகளை வீணாக்குகிறோம். சிலர் அதனை செடிகளுக்கு உரமாக பயன்படுத்துகிறார்கள். மேலும் இதன் மூலம் தொழில் முனைய வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் நான் கூறப்போகும் யோசனையை செய்யுங்கள். உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் உணவகத்தில் கண்டிப்பாக முட்டை பயன்படுத்தப்படும் அங்கிருந்து முட்டை ஓடுகளை திரட்டி கொள்ளுங்கள்.
பிறகு அதனை கழுவி சூடு நீரில் கொதிக்க விடுங்கள். கடையாக அதனை மாவு மில் போன்ற இடத்திற்கு எடுத்து சென்று அரைத்து பொடியாக்கி கொள்ளுங்கள். இந்த முட்டை ஓடு பொடிக்கு அமேசானில் அதிகமான தேவை இருந்து கொண்டே இருக்கிறது.
நெருஞ்சி முள்
உங்கள் கிராமங்களில் வளரும் நெருஞ்சி முள்ளை யாரும் கண்டு கொள்ளாமல் இருந்து இருப்பீர்கள். ஆனால் நெருஞ்சி முள் பல மூலிகை ஆரோக்கிய மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. நெருஞ்சி முட்களை பொட்டலம் செய்து அமேசான் நிறுவனத்திற்கு விற்று லாபம் ஈட்டலாம்.
வேப்பங் குச்சி
நமது நாட்டில் வேப்ப மரங்களின் பெருக்கம் அதிகம். ஆனால் அதனுடைய பலனை நாம் அரிதாகவே அனுபவிக்கிறோம்.வேப்பங்குச்சிகளின் தேவை வெளி மாநிலங்களில் அதிகம் உள்ளது. குறைந்தது 7 முதல் 8 நாட்கள் வரை வேப்பங்குச்சிகள் காயாமல் இருக்கும். அதற்குள் அதனை தேவைப்படுபவர்களிடம் கொண்டு சேர்க்கலாம். நீங்கள் உடைக்கும் வேப்பங்கிளையிலிருந்து கிடைக்கும் இலைகளை உங்களது ஆடுகளுக்கோ மாடுகளுக்கோ தீவனமாக கொடுக்கலாம்.
மேலும் படிக்க...
உள்நாட்டு வணிக யோசனைகள்: முதல் 5 யோசனைகளைத் தொடங்கி அதிக லாபம் ஈட்டலாம்!