தூத்துக்குடி மாவட்டத்தில் புரெவி புயல் சேத இழப்பீடாக 466 விவசாயிகளுக்கு ரூ.44 லட்சம் வழங்கப்பட்டதாக, மாவட்ட வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.ஐ. முகைதீன் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசுகையில்:
15 மிலி மழை அதிகம் (Excess Rain)
மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையின் இயல்பான அளவு 429.44 மில்லி மீட்டர் ஆகும் ஆனால், நிகழாண்டில், டிசம்பர் 31 வரை 444.42 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
இயல்பான மழை அளவைவிட தற்போது 15.02 மில்லி மீட்டர் அதிகமாக பெய்துள்ளதால், மாவட்டத்தில் அதிகப்படியான பகுதிகளில் விவசாயம் அதிகரித்துள்ளது
மாவட்டத்தில் நெல் பயிர் தற்போது வரை 14,000 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இன்னும் கூடுதலாக 5000 ஹெக்டேர் அளவுக்கு சாகுபடி இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
மாவட்டத்தில் இயல்பான நெல் சாகுபடி பரப்பு 14,386 ஹெக்டேர் ஆகும். இந்த ஆண்டு அரசு நிர்ணயித்த இலக்கு 17,000 ஹெக்டேர் ஆகும். ஆனால், இலக்கை தாண்டி இந்த ஆண்டு சாகுபடி இருக்கும்.
சாகுபடி அதிகரிப்பு (Cultivation Increased)
இதேபோல, உளுந்து, பாசிப்பயறு போன்ற பயறு வகை பயிர்கள், மக்காசோளம், கம்பு, சோளம் போன்ற சிறுதானிய பயிர்கள், பருத்தி, எண்ணை வித்து பயிர்கள், அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இயல்பான வேளாண் பயிர்கள் சாகுபடி பரப்பு 1.37,456 ஹெக்டேர் ஆகும் நிகழாண்டுக்கான இலக்கு 1,77,310 ஹெக்டேர் ஆகும்.
இதில் இதுவரை 1,72,442 ஹெக்டேர் பயிர்கள் சாகுபடி செய்யப் பட்டுள்ளது. எனவே, இந்த ஆண்டு இலக்கை தாண்டிவிட வாய்ப்புள்ளது.
466 விவசாயிகளுக்கு இழப்பீடு (Compensation to 466 farmers)
புரெவி புயல் காரணமாக மாவட்டத்தில் 515 விவசாயிகளுக்கு சொந்தமான 510.8 ஹெக்டேர் அளவுக்கு பயிர்கள் சேதமடைந்ததாகக் கண்டறியப்பட்டு, அரசிடம் இருந்து ரூ.5 லட்சத்து 51 ஆயிரத்து 960 இழப்பீடு கோரப்பட்டது. இதில் முதல் கட்டமாக 466 விவசாயிகளின் 404.6 ஹெக்டேர் பயிர்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.44 லட்சத்து 67 ஆயிரத்து 750 இழப்பீடு வரவு வைக்கப்பட்டுள்ளது.
உரத்தட்டுப்பாடு இல்லை(No compaction)
மாவட்டத்தில் தற்போது 4500 டன் யூரியா, 1750டன் டிஏபி, 1300 டன் பொட்டாஷ், 2700 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பில் உள்ளது. உரங்கள் தட்டுப்பாடு ஏதும் இல்லை. அதுபோல மாவட்டத்தில் இதுவரை 140.248 ஹெக்டேர் பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க...
வேளாண் பொறியியல் கருவிகளுக்கு ஒரு மணிநேரத்திற்கு என்ன வாடகை? முழு விபரம் உள்ளே!
நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம் - விவசாயிகள் கவனத்திற்கு!
பொங்கல் பரிசு இன்னும் வாங்கவில்லையா? கவலைப்படாதீங்க! கால அவகாசம் நீட்டிப்பு!