2021-22 ஆம் ஆண்டில் முதன்மை வேளாண் பயிர்கள் உற்பத்தி குறித்த நான்காவது முன் மதிப்பீடு அறிக்கையை மத்திய வேளாண் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கடந்த 2022-21ம் ஆண்டின் உணவு தானிய உற்பத்தியை விட, 4.98 மில்லியன் டன் அதிகமாக 315.72 மில்லியன் டன் அளவுக்கு உணவு தானிய உற்பத்தி நடைபெறும் என்று மதிப்பீட்டுள்ளது. 2021-22ம் ஆண்டின் உணவு தானியங்களின் சராசரி உற்பத்தி அதன் முந்தைய 5 ஆண்டுகளை விட, 25 மில்லியன் டன் அதிகமாக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரிசி, சோளம், பருப்பு வகைகள், கடுகு, எண்ணெய் வித்துக்கள் மற்றும் கரும்பு ஆகியவற்றில் பெருமளவில் உற்பத்தி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உகந்த கொள்கைகளை மத்திய அரசு வகுத்ததன் மூலமும், விவசாயிகளின் அயராத உழைப்பாலும், விஞ்ஞானிகளின் விடா முயற்சியாலும் பல பயிர்களின் உற்பத்தி சாதனை அளவாக இருக்கும் என்று வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க: