தெலங்கானா மாநிலத்தில் கடந்த 60 ஆண்டுகளாக தன் வாழ்க்கையையே அர்பணித்து விவசாயி ஒருவர் 70 ஏக்கர் நிலத்தில் காடு ஒன்றை உருவாக்கி 5 கோடி மரங்களை வளர்த்துள்ளார். மரம் வளர்த்து, மழையைப் பெறுவோம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதனைக் கருத்தில்கொண்டு, நாம் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட மரக்கன்றுகளோ, நட்டு வளர்த்திருப்போம் அல்லது வீட்டில் தோட்டம் அமைத்து பராமரிப்போம்.
ஆனால் ஒருவர் ஒரு காட்டையே உருவாக்கியுள்ளார் என சொன்னால் நம்ப முடிகிறதா? உண்மை அதுதான். கடந்த 60 ஆண்டுகளில் தன் வாழ்க்கையையே அர்பணித்து ஒருவர் சாதித்துள்ளார்.தெலங்கானா மாநிலம் சூர்யபேட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்யநாராயணா, 68 வயதான இவர் இவருக்கு சொந்தமான 70 ஏக்கர் நிலத்தை இயற்கைக்காக அர்பணித்துள்ளார். அந்த இடத்தில் அவர் 5 கோடி மரங்கள், 32 வகையான பறவைகள், 7 குளங்களை கட்டி பராமரித்து வருகிறார். இதை இவர் தனி ஆளாக செய்துள்ளார் என்பதுதான் வியப்பின் உச்சம்.
சத்யநாராயணாவிற்கு 7 வயதில் இருக்கும்போது இயற்கை மீது அதிக ஈர்ப்பு மிக்கவராகத் திகழ்ந்திருக்கிறார். இவரது ஆசையைத் தெரிந்துகொண்டத் தந்தையும், உறுதுணையாக இருக்க முன்வந்தார். ஆக 7 வயது முதல் தனது தந்தைக்குச் சொந்தமான நிலத்தில், மரங்களை நட்டுவருகிறார். சுமார் 60 ஆண்டுகாள, இவர் அந்த பகுதியில் 5 கோடி மரங்கள், 32 வகையான பறவைகள், 7 குளங்கள் அதில் ஒன்று தாமரைக்குளம், என சொந்தமாக தனக்கென ஒரு காட்டையே உருவாக்கியுள்ளார். பி.எஸ்சி விவசாயப் பட்டதாரியான சத்தியநாராயணன், வங்கி வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் ஒரு குடிநீர் பிரச்சனைக்காக போராட தன் வேலையை உதறி தள்ளவிட்டு இயற்கைக்காக தன் வாழ்க்கையையே அர்பணித்தார்.
இவரது இடத்தை விலைக்கு வாங்க பலர் பல கோடிகளை பேசினர். ஆனால் ஒரு அடி நிலத்தை கூட தனக்கு விற்பனை செய்ய சம்மதம் இல்லை என அவர் கூறி மறுத்துவிட்டார். இன்றுவரை 70 ஏக்கர் நிலத்தை தனி ஆளாக பராமரித்து ஒரு காட்டையே உருவாக்கியுள்ளார்.
மேலும் படிக்க...
இதைக் குடித்தால், வெயிலுக்கும் Goodbye- அதிக Weightக்கும் Goodbye!