பிரதமர் கிசான் ட்ராக்டர் யோஜனா (PM Kisan Tractor Yojana) என்ற ஒரு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 5 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுவதாக சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல ஒரு தகவல் பரவி வருகிறது.
மோசடி கும்பல் (Fraudulent gang)
அரசின் திட்டங்களைக் காட்டி மக்களிடம் கொள்ளையடிப்பதற்காக சில கும்பல் செயல்பட்டு வருகிறது. திட்டங்கள் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், விஷமக் கும்பல்களின் சூட்சமங்களும் அரங்கேறி வருகின்றன.
புது மோசடி (New fraud)
அந்த வகையில் தற்போது, பிரதமர் கிசான் ட்ராக்டர் யோஜனா (PM Kisan Tractor Yojana) என்ற ஒரு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 5 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுவதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறது.
இந்நிலையில் இத்தகவல் குறித்து பத்திரிகை தகவல் அலுவலகம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தியது. பத்திரிகை தகவல் அலுவலகம் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வருகிறது.
திட்டமே இல்லை (No Scheme)
இதன்படி, பிரதமர் கிசான் ட்ராக்டர் யோஜனா என்ற ஒரு திட்டமே இல்லை என பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது முழுக்க முழுக்க ஒரு பொய்யான தகவல் என பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் இணையதளத்தில் பிரதமர் கிசான் ட்ராக்டர் யோஜனா என்ற பெயரில் எந்தவொரு திட்டமும் இடம்பெறவில்லை. எனவே, 5 லட்சம் மானியம் வழங்கப்படுவதாக பரவும் தகவல் பொய்யானது என உறுதியாகிறது. எனவே இதுபோன்ற போலித் தகவல்களை நம்பி விவசாயிகள் ஏமாற வேண்டாம். இவற்றைத் தீர ஆராய்ந்து, கவனமாக இருப்பதே சிறந்தது.
எச்சரிக்கை கட்டாயம் (Warning is mandatory)
இதுபோன்ற பெயரில் போலித் திட்டங்களை வைத்து சில மோசடி கும்பல்கள் விவசாயிகளிடம் கொள்ளையடிப்பது அண்மைகாலமாக அதிகரித்து வருகிறது. எனவே விவசாயிகள் எச்சரிக்கையாக இருப்பது தற்போதைக் கட்டாயமாகி இருக்கிறது.
மேலும் படிக்க...
குறுவை நெல் கொள்முதல் பணிகள்- விரைவாக முடிக்க முதலமைச்சர் உத்தரவு!
கட்டணம் வசூலித்தால், கல்லூரி உரிமம் ரத்து- பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை!