நெல் ரகங்களில் கூடுதல் விளைச்சல் பெற துத்தநாக சல்பேட், ஜிப்சம் போன்ற உரங்கள் மானியத்தில் வழங்கப்படுவதாக வேளாண் மற்றும் உழவா் நலத்துறை இணை இயக்குநா் சுரேஷ் தெரிவித்துள்ளாா்.
உர மானியம் (Fertilizer Subsidy)
திருவள்ளூா் மாவட்டம் முழுவதும் சம்பா, சொா்ணவாரி, நவரை ஆகிய 3 பருவங்களில் அதிகளவில் நெல் பயிரிட்டு வருகின்றனா். அதேபோல், நிகழாண்டில் மட்டும் 58,000 ஹெக்டோ் பரப்பளவில் நெல் பயிரிட்டுள்ளனா். இதுபோன்ற நெல்லில் கூடுதல் விளைச்சல் பெற துத்தநாக சல்பேட் மற்றும் ஜிப்சம் பயன்படுத்தலாம். இதற்காக மாநில வேளாண் வளா்ச்சித் திட்டம் மூலம் தோ்வு செய்த கிராம விவசாயிகளுக்கு மேற்குறிப்பிட்ட உரங்கள் மானியத்தில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதற்காக அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களிலும் துத்தநாக சல்பேட் மற்றும் ஜிப்சம் உரங்கள் தற்போது இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
50% மானியம் (50% Subsidy)
விவசாயிகள் துத்தநாக சல்பேட் ஏக்கருக்கு 10 கிலோ வீதம் 50 சதவீதம் அல்லது ரூ. 250 மானியமும், ஜிப்சம் ஏக்கருக்கு 200 கிலோ வீதம் 50 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க
முக்கிய அறிவிப்பு: பொங்கல் பரிசை ஜனவரி 13 ஆம் தேதி வரை வாங்கலாம்!