பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 30 December, 2022 3:21 PM IST

டிசம்பர் 12,2022 குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பேரூராட்சிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை பயன்பாட்டிற்கு வழங்கப்பட்ட மின்சார வாகனங்களை கொடியசைத்து துவங்கி வைத்தார் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மேலும் வடலூரில் பொது மருத்துவ முகாமையும் துவக்கி வைத்தார்.

2.50% மானியத்தில் வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள்

தமிழக அரசின், வேளாண்மைப் பொறியியல் துறை சார்பாக வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் வேளாண் விளைபொட்களை மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் வழங்குதல் அல்லது வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டும் இயந்திர சேவை மையங்கள் அமைத்தல், அனைத்து விவசாயிகளுக்கும் 40 % மானியமும், ஆதி திராவிட மற்றும் பழங்குடியின பிரிவில் உள்ள சிறு குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20% மானியம் வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு file:///C:/Users/HP/Downloads/phtm_pamphlet.pdf இணையதளத்தை பார்க்கவும், மேலும் ஆன்லைனில் விண்ணப்பிக்க mis.aed.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

3.கரும்புக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.195 வழங்கல்

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.195 வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் துவக்கு வைத்ததைத் தொடர்ந்து, 2021-22 அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய அனைத்து விவசாயிகளுக்கும் சிறப்பு ஊக்கத் தொகையினை விரைவில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

4.ஈரோட்டில் யானை தாக்கியதில் 62 வயது விவசாயி, காயமடைந்தார்

சத்தியமங்கலம் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை காட்டு யானை தாக்கியதில் 62 வயது முதியவர் காயமடைந்தார். சத்தியமங்கலம் கோட்ட வன அலுவலர் ஒருவர் கூறியதாவது: ராமபையனூர் கிராமத்தைச் சேர்ந்த ஆர்.அம்மாசாய் குட்டி என்பவர் தனது விவசாய நிலத்தில் வாழை செடிகளை பாதுகாத்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. “சனிக்கிழமை இரவு உணவுக்குப் பிறகு, விவசாய நிலத்துக்குச் சென்றார், அம்மாசாய் குட்டி. நள்ளிரவு 2 மணியளவில் விவசாய நிலத்திற்குள் புகுந்த ஒற்றை யானை அவரை தாக்கியது. நீண்ட போராட்டத்திற்கு பின், காபாற்றப்பட்ட விவசாயி அம்மாசாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

5.அனைவருக்கும் நல வாழ்வு திட்டம்: நாட்டிலேயே முதலிடம் பெற்று தமிழகம் சாதனை

ஆண்டுதோறும் டிசம்பர் 12ம் தேதி இன்று அனைவருக்கும் நலவாழ்வு திட்ட தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டில், நாம் விரும்பும் ஆரோக்கியமான எதிர்கால உலகத்தை அனைவருக்கும் உருவாக்குவோம்" என்ற மையக் கருத்துடன் இதற்கான விழா, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் கடந்த 2 நாட்களாக (டிசம்பர்10,11) கொண்டாடப்பட்டது. மத்திய, மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள், பொது சுகாதாரத் துறை நிபுணர்கள் கலந்துகொண்ட, இந்த நிகழ்வில் அனைவருக்கும் நல வாழ்வு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்கள் கவுரவிக்கப்பட்டன. அந்த வகையில், தனது பணியை சிறப்பாக செய்து தமிழகம் முதலிடம் பிடித்ததற்கான பாராட்டு சான்றிதழ், கேடயத்தை தமிழ்நாடு தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷூக்கு மத்திய சுகாரதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா வழங்கி கவுரவித்தார்.

6.பசுமைக்குடில்/ நிழல்வலைக்குடில் அமைக்க 70% மானியம்

வெள்ளரி, குடை மிளகாய், கார்னஷன் கொய்மலர், ரோஜா கொய்மலர் போன்ற பயிர்களில் பசுமைக்குடில் (Polygreen House)/ நிழல்வலைக்குடில் (Shadenet) அமைப்பதற்கு தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், அனைத்து விவசாயிகளுக்கும் 50 சதவித மானியம் வழங்கப்படுகிறது. ஆதி திராவிட, பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு, கூடுதலாக 20 சதவித மானியம் ஆக மொத்தம் 70 சதவிகித மானியம் வழங்கப்படும். கூடுதலாக வழங்கப்படும் மானியத்திற்காக மாநில அரசு நிதி ஒதுக்கி உள்ளது.

7.மூலிகை தோட்டம் அமைக்க 50% மானியம் வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" - தமிழக மக்கள் நோயற்று வாழ தமிழக அரசு தோட்டக்கலை துறையின் மூலம் வீடுகளில் மூலிகை தோட்டம் அமைக்க ரூ. 1 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மூலிகை தோட்டம் அமைக்க, 1,500 ரூபாய் மதிப்புள்ள மூலிகை தொகுப்பு, 50 சதவீத மானியத்தில், 750 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. வகைக்கு 2 வீதம், துளசி, திருநீற்றுபச்சிலை, வல்லாரை, கற்பூரவல்லி, கற்றாழை, பிரண்டை, கீழாநல்லி, ஆடாதொடை, திப்பிலி, அஸ்வகந்தா, ஆகிய, 10 வகையான மூலிகைச் செடிகள் வழங்கப்பட உள்ளன.

8.ஏக்கருக்கு ரூ.10,000 விவசாயிகளுக்கு மானியம் அறிவிப்பு

திருவாரூரில் விவசாயிகளுக்கு தாட்கோ திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தாட்கோ (தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம்) சார்பில் 2022-23ஆம் நிதியாண்டில் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளின் கால்நடைகளுக்குத் தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க விதைத் தொகுப்பு மற்றும் புல்கறணைகள் வழங்க ரூ.1 கோடி செலவில் ஒரு பயனாளிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 என்ற மானியம் ஒதுக்கீடு செய்து அரசாணை வரப்பெற்றுள்ளது.

9.பனையில் இருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க 50% மானியம்!

தோட்டக்கலை- மலைப்பயிர்கள் துறை சார்பாக, பனை மேம்பாட்டு இயக்கம் 2022-23 ஆம் ஆண்டிற்கான திட்டத்தின் கீழ் பனையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பதற்கான உபகரணங்கள் மானிய விலையில் கிடைக்கப்பெறுகிறது. ஒரு அலகிற்கு 50 சதவீதம் மானியமாக ரூ.4000/- வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் ஆதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம். http://tnhorticulture.tn.gov.in/tnhortnet/index.php

10.வானிலை தகவல்

இன்று தமிழ்நாடு,புதுவை மற்றும் காரக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பொழிவு இருந்தது. நாளை மற்றும் மேலும் 2 நாட்கள் இதே நிலை நீடிக்கலாம். என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. னவர்களுக்கான எச்சரிக்கை அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு லட்சதீவு பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் படிக்க:

PMFBY update| Polygreen house அமைக்க 70% மானியம்| மூலிகை தோட்டத்திற்கு 50% மானியம்| நிவாரண உதவிகள்

PM கிசான்| உபகரணங்கள் 75% மானியம்| TN Climate Summit 2022| e-nam குறித்து ஆய்வு| மாண்டுஸ் புயல்

English Summary: 50% Subsidy for purchase of Value Addition Machine for agricultural products| Incentive to the farmer for sugarcane is Rs.195
Published on: 12 December 2022, 03:43 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now