Farm Info

Monday, 23 November 2020 08:43 AM , by: Elavarse Sivakumar

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் குழாய் துணை நிலை, நீர் மேலாண்மை திட்டப்பணிகளுக்கு, விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது:

  • தமிழகத்தில், நுண்ணீர் பாசன அமைப்புகளை உருவாக்குவதற்கு அரசு தொடர்ந்து பல்வேறு சலுகைகளை வழங்கிவருகிறது. இதன் ஒருபகுதியாக சிறு, குறு விவசாயிகளுக்கு முழு மானியமும், பிற விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியமும் அளிக்கப்படுகிறது.

  • நுண்ணீர் பாசன முறைக்காக வழங்கப்படும் மானியம் மட்டுமின்றி, குழாய் கிணறு, துளை கிணறு அமைக்கவும், நீரினை இறைப்பதற்கு ஆயில் இன்ஜின், மின்மோட்டார் வசதி ஏற்படுத்த மானியம் வழங்கப்படுகிறது.

  • மேலும், பாசன நீரினை வீணாக்காமல் வயலுக்கு அருகில் கொண்டு செல்வதற்கும், பாசன நீர் குழாய்களை நிறுவவும், தரைநிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல் போன்ற, துணை நிலை நீர் மேலாண்மை பணிகளுக்காக, ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

  • இதுதவிர குழாய் கிணறு, ஆழ்துளை கிணறு அமைக்க, டீசல் பம்புசெட், மின் மோட்டார் பம்புசெட் நிறுவ, நீர் பாசன குழாய் அமைக்க, பாதுகாப்பு வேலியுடன் தரைநிலை நீர்தேக்கத் தொட்டி நிறுவ, ஆகிய பணிகளுக்கு தலா, 50 சதவீதம் மானியம் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கப்படும்.

  • எனவே இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக்கொள்ள விரும்பும் விவசாயிகள், வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அவர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

ஆவின் நிறுவனத்தில் வேலை- ரூ.50,000 வரை ஊதியம்!

அழகுக்கும் கழுதைக்கும் ஆயிரம் சம்மந்தம் - தெரியுமா உங்களுக்கு!

80% அரசு மானியத்தில் அசத்தல் வியாபாரம்- முழு விபரம் உள்ளே!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)