Farm Info

Friday, 18 December 2020 10:44 AM , by: Elavarse Sivakumar

திருப்பூர் மாவட்டத்தில் சூரிய மின் வேலி  (Sunlight electric fence) அமைக்க மானியம் வழங்கப்பட உள்ளதால், விருப்பமுள்ள விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

  • தமிழகத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக 2020-21ம் ஆண்டில் சூரிய சக்தியால் இயங்கும் சூரிய ஒளி மின்வேலியினை  (Sunlight electric fence) ரூ.3 கோடி மானியத்துடன் தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • இத்திட்டத்தில் விண்ணப்பிக்க ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 2 ஹெக்டேர் பரப்பு அல்லது 565 மீட்டருக்கு சூரிய மின் வேலி அமைக்க மானியம் வழங்கப்படும்.

  • சூரிய மின்வேலி அமைப்ப தற்கான செலவுத் தொகையில் 50 சதவீதம் மானியமாக வழங்கப் படும்.

  • இதில், 5 வரிசைகள் கொண்ட சூரிய மின்வேலி அமைக்க ஒரு மீட்டருக்கு ரூ.249 வீதமும், 7 வரிசைக்கு ரூ.299 வீதமும், 10 வரிசைக்கு ரூ.349 வீதமும் விவசாயிகள் தங்கள் பகுதிக்கு ஏற்றவாறு தேர்வு செய்து கொள்ளலாம்.

  • இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள் திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை 94864-42437 என்ற செல்போன் எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

  • தாராபுரம் டிஎஸ்பி அலுவலகம் எதிரில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை 99427-03222 என்ற செல்போன் எண்ணிலும், உடுமலை, யசோதா ராமலிங்கம் லேஅவுட் பகுதியில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை 98655-63400 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

மகசூலை 20% அதிகரிக்கும் திரவ உயிர் உரங்கள்!

மண்ணில்லா விவசாயத்திற்கான ஏரோபோநிக்ஸ்- 25% மானியம் தருகிறது அரசு!

அறுவடை பரிசோதனைக்கு, தற்காலிக பணியாளர்கள் நியமனம்- விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)