Farm Info

Monday, 19 September 2022 01:29 PM , by: Elavarse Sivakumar

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின சமுதாயத்தைச் சோ்ந்த ஆயிரம் விவசாயிகள் தட்கல் முறையில் மின் இணைப்பு பெற 90 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பைத் தவறாது பயன்படுத்திக்கொள்ளுமாறு வேளாண்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

வைப்புத்தொகை

இது தொடா்பாக தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- விவசாயத்துக்கு தட்கல் முறையில் மின் இணைப்புப் பெறும் திட்டத்தின் கீழ், குதிரைத் திறனுக்கேற்ப ரூ.2.50 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை வைப்புத் தொகை செலுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையில், 1000 ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகள் தட்கல் முறையில் மின் இணைப்புப் பெற 90 சதவீதம் மானியம் வழங்கப்படும் என சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.

1000 விவசாயிகளுக்கு

இந்த அறிவிப்பின்படி, 900 ஆதிதிராவிடா் மற்றும் 100 பழங்குடியின விவசாயிகளுக்கு தட்கல்முறையிலான மின் இணைப்புக்கு மானியம் அளிக்கப்பட உள்ளது. இதற்காக அரசுக்கு ரூ.23.37 கோடி செலவாகும்.

நிபந்தனை

அரசு மானியத்தில் மின் இணைப்புப் பெறும் விவசாயிகள், தங்களது நிலங்களை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு விற்பனை செய்யக் கூடாது. இந்த நிபந்தனையுடன் கூடிய உறுதிமொழி ஆவணம் பெறப்பட்ட பிறகே, திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று தாட்கோ நிா்வாக இயக்குநா் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளாா்.

மாவட்ட ஒதுக்கீடு

இதன்படி, அரியலூரில் 19, கோவை 1, கடலூா் 35, தருமபுரி 34, திண்டுக்கல் 42, ஈரோடு 18, காஞ்சிபுரம் 29, கரூா் 18, கிருஷ்ணகிரி 47, மதுரை 30, நாகப்பட்டினம் 20, நாமக்கல் 24, பெரம்பலூா் 32, புதுக்கோட்டை 42, ராமநாதபுரம் 17, சேலம் 34, சிவகங்கை 31, தஞ்சாவூா் 25, தேனி 32, தூத்துக்குடி 27, திருச்சி 34, திருநெல்வேலி 25, திருவள்ளூா் 35, திருவண்ணாமலை 59, திருவாரூா் 37, திருப்பூா் 29, வேலூா் 42, விழுப்புரம் 57 விருதுநகா் 25 என மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்த விவசாயிகள் தோ்வு செய்யப்பட உள்ளனா். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

95 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம்- அதிர்ச்சியில் கூலித்தொழிலாளி!

ஒரு மணி நேரத்திற்கு ரூ.5600 சம்பளம்-இதுவும் சூப்பர் பிஸ்னஸ்தான்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)