தாமே அடகு வைத்த நெல் மூட்டைகளை, வேளாண் கண்காணிப்பாளருடன் சேர்ந்து விவசாயி ஒருவர் கொள்ளை அடித்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த அந்த விவசாயி, அப்பகுதியில் உள்ள வங்கியில் 1,850 நெல் மூட்டைகளை அடகு வைத்து ரூ.18 லட்சம் பெற்றிருந்தார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்த விவசாயி ராஜ்குமார். இவர் கடந்த ஆண்டு பொதுத்துறை வங்கி ஒன்றில் 1850 நெல் மூட்டைகளை அடமானம் வைத்து 18 லட்சம் ரூபாயைக் கடனாகப் பெற்றிருக்கிறார்.
இந்த 1,850 நெல் மூட்டைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு பெருந்துறை என்சிஎம்எல்(NCML) நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.அந்த நிறுவனம் தச்சன்புதூரில் தனியாருக்கு சொந்தமான குடோன் ஒன்றை வாடகைக்கு எடுத்து 1850 நெல் மூட்டைகளை வைத்தது. இந்த நெல் மூட்டைகளைக் கண்காணிக்க இரண்டு பேர் கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், குடோனில் வைக்கப்பட்டிருந்த 1850 நெல் மூட்டைகளை கடன் பெற்ற விவசாயி மற்றும் கண்காணிப்பாளர்கள் இருவர் என மூன்று பேரும் கூட்டு சேர்ந்து நெல் மூட்டைகளை திருடி விற்பனை செய்துள்ளனர். நிறுவன அதிகாரிகள் கேட்கும்போது நெல் மூட்டைகள் பாதுகாப்பாக இருப்பதாக நாடகமாடியுள்ளனர். கண்காணிப்பு பணிக்காக மாதந்தோறும் சம்பளமும் பெற்று வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்தாண்டு ஜூன் மாதம் குடோன் ஆய்வு பணிக்காக வங்கியில் இருந்து வந்த அதிகாரிகள் குடோனை திறந்த பார்த்தபோது நெல் மூட்டைகளைக் காணவில்லை. இதுகுறித்து என்சிஎம்எல் நிறுவன மேலாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. அவர், தாராபுரம் காவல்நிலையத்தில் விவசாயி ராஜ்குமார் மற்றும் குடோன் கண்காணிப்பாளர்கள் எம்.சுரேஷ்குமார், எஸ்.சுரேஷ்குமார் மீது தாராபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மூவர் மீது நடவடிக்கை எடுக்க தாராபுரம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவின்படி மூவரையும் அழைத்து விசாரணை நடத்தியதில் நடத்தியதில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதனயடுத்து மூவரையும் சிறையில் அடைத்தனர். அடகு வைத்த நெல் மூட்டைகளை விவசாயியே, அதனைத் திருடி விற்பனை செய்த சம்பவம் அதிகாரிகளின் கவனக்குறைவையே அச்சிட்டுக் காட்டுவதாக இருக்கிறது.
மேலும் படிக்க...
இவற்றைத் தவிர்க்காவிட்டால், உங்கள் எலும்புகள் பொடிப்பொடியாவது உறுதி!
கொரோனா அதிகரித்தாலும் முகக்கவசம் கட்டாயமில்லை - எப்போது முதல்?