Farm Info

Friday, 24 February 2023 08:22 PM , by: Elavarse Sivakumar

விளைச்சல் அதிகரிப்பு காரணமாக, விளைபொருட்களை, அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்யும் நிலையைக் கூட விவசாயிகள் எதிர்கொள்ள நேரிடுகிறது.  அப்படியொரு நிலையை  இந்த மாநில வெங்காய விவசாயிகள் எதிர்கொண்டுள்ளனர்.

வெங்காயம் விளைச்சல் கணிசமாக அதிகரித்துள்ளதால் அதன் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. 512 கிலோ வெங்காயத்தை விற்பனை செய்ததில் ரூ.2 மட்டுமே கிடைத்தததாகக் தனது வேதனையைப் பகிர்ந்துகொண்டார்  துக்காராம் என்கிற விவசாயி.

1 ரூபாய்க்கு

மராட்டிய மாநிலத்தில் வெங்காயம் விளைச்சல் கணிசமாக அதிகரித்துள்ளதால் அதன் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.பார்ஷி பகுதியைச் சேர்ந்தவர்ராஜேந்திர விவசாயி துக்காராம் சவான். 58 வயதான  இவர் தனது நிலத்தில் விளைந்த 512 கிலோ வெங்காயத்தை விற்பனை செய்ய வேளாண் விளை பொருள் விற்பனை கூடத்துக்கு கொண்டு சென்றார். ஆனால் கடுமையான விலை வீழ்ச்சியால் 1 கிலோ வெங்காயம் 1 ரூபாய்க்கே கொள்முதல் செய்யப்பட்டது.

512 கிலோ

மொத்தத்தில் 512 கிலோ வெங்காயத்தை விற்றதில் விவசாயி துக்காராமுக்கு ரூ.512 மட்டுமே கிடைத்தது. வெங்காயத்தை 70 கிலோ மீட்டர் தூரம் கொண்டு சென்றதற்கான லாரி வாடகை, சுமை கூலி ஆகியவற்றுக்கு ரூ.510 செலவானது. அந்த வகையில் 512 கிலோ வெங்காயத்தை விற்ற விவசாயி துக்காராமுக்கு எல்லா செலவும் போக மிஞ்சியது வெறும் 2 ரூபாய்தான்.

ரூ.2 மட்டுமே

வெங்காயத்தை வாங்கியக் கடைக்காரர், விவசாயி துக்காராமிடம் 2 ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். அந்த காசோலையையும் 15 நாட்களுக்கு பிறகே பணமாக்க முடியும். இந்த காசோலை சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. உண்மையில் இந்த வெங்காயத்தை விளைவிக்கக் கிட்டத்தட்ட அவர் ரூ.40 ஆயிரம் செலவழித்துள்ளேன்.

2 மடங்கு

கடந்த 4 ஆண்டுகளில் விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 1 கிலோ வெங்காயத்துக்கு 20 ரூபாய் கிடைத்துள்ள நிலையில், இந்த ஆண்டு மொத்தமே 2 ரூபாய்தான் கிடைத்திருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க…

முக்திக்கான பாதையின் வழிகாட்டியாகத் திகழ்கிறார் சிவன்!

விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000!- விபரம் உள்ளே

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)