மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 22 March, 2024 11:28 AM IST
A role for agricultural pesticides

தற்போது எங்கு பார்த்தாலும் ஆண்களிடையே காணப்படும் மலட்டுத்தன்மையை போக்கிட  (FERTILITY CENTRE) பெரிய நகரங்களில் மட்டுமல்ல, சிறு நகரங்களிலும் அதிகமாக காணப்படுகின்றன. இவையெல்லாம் கடந்த 20 ஆண்டுகளில் நடந்த மாற்றங்கள். இதற்கு தற்போதைய விவசாய நடைமுறைகளும் ஒருக்காரணம் என ஆதாரங்களுடன் அடுக்குகிறார் வேளாண் ஆலோசகரான அக்ரி சு.சந்திர சேகரன். இதுக்குறித்து அவர் நமக்கு அளித்த தகவல்கள் பின்வருமாறு-

மனித வாழ்வில் பெரிய தாக்கத்தை, வயல்வெளிகளில் அதிகமாக தெளிக்கப்படும் பூச்சிக் கொல்லிகளின் பயன்பாடு ஏற்படுத்தியுள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன்பு வரையும் விவசாயம் ஓரு செலவில்லாத தொழிலாகவும், மனிதன் மாடுகளின் உழைப்பை மட்டுமே நம்பி தான் இருந்தார்கள்.

பல்கலைக்கழகம் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்:

விவசாயம் இன்றைய காலக்கட்டத்தில் பூச்சிக் கொல்லிகள் மற்றும் இரசாயன உரங்களை முழுக்க முழுக்க நம்பி இருக்கிறது. அதனுடைய விளைவால் நஞ்சானது விவசாயம், நலம் குன்றியது மனித வாழ்க்கை. ஆண்களின் விந்தணுக்கள் உற்பத்தி குறைந்து வருவதோடு, அதன் அடர்த்தியும் குறைந்து குழந்தை பேறு பெற இயலாத நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாக அமெரிக்க பல்கலைக்கழகமான ஜார்ஜ் மேசன் (george mason university) வெளியிட்ட ஆய்வு ஒன்று அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தியாவில் பூச்சிக் கொல்லியின் பயன்பாடு எவ்வாறு?

நம்முடைய நாட்டில் 1954 ஆம் ஆண்டில் பூச்சி மருந்தின் பயன்பாடு வெறும் 154 மெ.டன்னாக தான் இருந்தது. ஆனால் இன்றோ 2,00,000 மெ.டன் என்றளவில் உள்ளது. பூச்சி மருந்து தெளிக்காமல் எந்த விவசாயமும் செய்ய முடியாது என்ற மனநிலையில் தான் விவசாயிகள் இருக்கிறார்கள்.

இந்தியாவில் 273 வகையான பூச்சிகொல்லி மருந்துகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், வெளி நாட்டு பூச்சி மருந்துகளும் வரத் தொடங்கி விட்டன. உலகெங்கும் தடை செய்யப்பட்ட 93 வகையான பூச்சிக் கொல்லிகள் நம்முடைய நாட்டில் சர்வ சாதாரணமாக விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். அங்க பாஸ்பேட் (ORGANO PHOSPHATES) மற்றும் கார்போ மேட்டுகள் (CARBAMATES) போன்றவற்றை அடிப்படையாக கொண்ட பூச்சி மருந்துகள் தான் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.

பூச்சிக்கொல்லியால் ஏற்படும் பாதிப்பு என்ன?

இந்தியாவில் வருடத்திற்கு சாரசரியாக 10,000 பேர் பூச்சிக் கொல்லியால் வருடந்தோறும் இறக்கின்றனர். அத்துடன் இல்லாமல் மனிதனின் விந்தணுக்களின் அடர்த்தியானது கடந்த 50 ஆண்டுகளில் 50% அளவிற்கு குறைந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. அத்துடன் இல்லாமல் நரம்பு தளர்ச்சி கவனக்குறைவு, ஆட்டிஸம் (AUTISM) போன்ற நோய்களுடன் மிகவும் கொடுமையான புற்று நோய் உருவாக்குவதற்கு பூச்சிக் கொல்லிகளே காரணமாக உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளிலிருந்து விடுபட ஓரே மாற்றுவழி பண்டைய காலத்தில் பயன்படுத்தி வந்த புகையிலை கஷாயம், வேப்பங் கொட்டை கரைசல் தெளிப்பு செய்வதுடன் உயிரியல் பூச்சி/ பூஞ்சான கொல்லிகளை பயன்படுத்தி நஞ்சு இல்லாத உணவை படைக்க முற்படுவது மட்டுமே.இயற்கை வழி விவசாயத்தை மேற்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும் என வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திர சேகரன் தெரிவித்துள்ளார்.

(மேற்குறிப்பிட்ட தகவல்கள் தொடர்பாக ஏதேனும் சந்தேகம்/ முரண் இருப்பின் வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திரசேகரன் அவர்களைத் தொடர்புக் கொள்ளலாம். மொபைல் எண்: 9443570289)

Read more:

மண்புழு உர உற்பத்திக்கான படுக்கையினை தயார் செய்வது எப்படி?

அசுபா 117: புதிய கேரட் ரகத்தை அறிமுகம் செய்த Somani Seedz- சிறப்புகள் என்ன?

English Summary: A role for agricultural pesticides in Increasing male infertility
Published on: 22 March 2024, 11:28 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now