Farm Info

Monday, 07 June 2021 01:23 PM , by: T. Vigneshwaran

கிருஷி ஜாக்ரான், ஒவ்வொரு நாளும் விவசாயிகளுக்கு புதிய தகவல்களை வழங்குவதோடு, பல புதிய திட்டங்கள் மூலம் விவசாயிகளுடன் இணைந்திருக்கிறது, இதையெல்லாம் கிருஷி ஜாக்ரான் மற்றும் வேளாண் உலகின் தலைமை ஆசிரியர் திரு.எம்.சி. டொமினிக்கின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் விளைவால் சாத்தியமானது, இன்று நாடு முழுவதும் கிருஷி ஜாக்ரான் என்ற பெயர் உள்ளது. ஆரம்பத்தில் இருந்தே எம்.சி. டொமினிக் நாட்டின் விவசாயிகளுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று ஒரு கனவு கண்டார். இந்த கனவை நினைவாக்க  எம்.சி. டொமினிக் கிருஷி ஜாக்ரானைத் தொடங்கினார், இது விரைவில் விவசாயிகளின் குரலாக மாறியது. ஆனால் எம்.சி. டொமினிக்கின் கனவுகளின் பட்டியல் இன்னும் முடிவடையவில்லை, இப்போது அவர் விவசாயிகளுக்கு நிறைய செய்ய நினைத்திருக்கிறார், மேலும் இந்த பட்டியலில் FTB ஆர்கானிக் சேர்க்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் தயாரிப்புகளை  எளிதாக சாதாரண மக்களிடம் அடையக்கூடிய ஒரு தளம் இது.

உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, ஜூன் 7, 2021 இன்று , மிகப்பெரிய விவசாய ஊடக நிறுவனமான கிருஷி ஜாக்ரான், பேஸ்புக்கில் நேரடி மெய்நிகர் திறப்பு விழா மூலம் தனது FTB ஆர்கானிக் தளத்தை அறிமுகப்படுத்தியது.

திறப்பு விழாவுக்கு கிருஷி ஜாக்ரன் மற்றும் வேளாண் உலக தலைமை ஆசிரியர் ஸ்ரீ எம்.சி.டோமினிக் அவர்களும், FTB ஆர்கானிக்-இன் சிந்தனைக்கு பின்னால் இருக்கும் கிருஷி ஜாக்ரான் பிரைவேட் லிமிடெட் இயக்குனர் திருமதி ஷைனி டொமினிக் அவர்களும் ,மற்றும் நிகழ்ச்சியின் முதன்மை விருந்தினராக பத்மஸ்ரீ விருது பெற்ற விவசாயி பரத் பூஷன் தியாகி அவர்கள் கலந்து கொண்டனர்.

FTB ஆர்கானிக்

இந்த தளத்தின் மூலம், விவசாயிகள் தங்கள்  தயாரிப்புகளை சாதாரண மக்களுக்கு எளிதாக விற்க முடியும். உண்மையில், கிருஷி ஜாக்ரான் ஈ-காம்ஸ் தளமான FTB ஆர்கானிக் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார், இதில் விவசாயிகள் தங்கள் தயாரிப்புகளை நாடு முழுவதும் விற்க முடியும்.

எல்லோருக்கும் இப்போது தெரியும் இன்றைய காலம்  டிஜிட்டல் காலம். இத்தகைய சூழ்நிலையில், விவசாயிகள் முழுமையாக டிஜிட்டல் செயல்பாட்டில் இருப்பது மிகவும் முக்கியம். இதன் ஒரு முன்முயற்சியை கிருஷி ஜாக்ரான் FTB ஆர்கானிக் அறிமுகப்படுத்துவதன் மூலம் எடுத்துள்ளார். இப்போது விவசாயிகள் தங்கள் தயாரிப்புகளை வீட்டில் இருந்தே FTB ஆர்கானிக் வலைத்தளம் மூலம் நல்ல விலையில் விற்கலாம். இது அவர்களுக்கு நல்ல லாபத்தையும் தரும்.

மேலும் படிக்க:

விவசாயம் செய்தால் தான் எங்களுக்குச் சோறு! வரப்பு வெட்டி நாற்று நடும் குட்டி விவசாயி!!

இயற்கை விவசாயம் செய்ய நீங்க ரெடியா? கைகொடுக்கிறது விஜய் ஆர்கானிக்ஸ்!

https://ftborganic.com/

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)