Farm Info

Thursday, 01 September 2022 04:22 PM , by: Deiva Bindhiya

Additional incentive up to Rs.100 per quintal of paddy!

சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.75ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.100ம் கூடுகல் ஊக்கத் தொகையாக வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் காரீப் 2022-23 பருவத்திற்கான நெல் கொள்முதலை நாளை (1ம் தேதி) முதல் மேற்கொள்ள அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், காரீப் பருவம் 2002-2003 முதல் ஒன்றிய அரசின் முகவராக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் செயல்பட்டு ஒன்றிய அரசின் தர நிர்ணயத்திற்குட்பட்டு நெல் கொள்முதல் செய்து வருகிறது.

கடந்த 2021-2022 காரீப் கொள்முதல் பருவத்தில் தேவையான அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டும் காரீப் கொள்முதல் 2022-2023 பருவத்தில் தேவையான அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து ஒன்றிய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

இந்த ஆண்டு வழகத்திற்கும் முன்பாகவே மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ள நிலையிலும், விவசாயிகளுக்குத் தேவையான அளவு விதைகள் மற்றும் உரங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையிலும், விவசாயிகளின் நலன் கருதி தமிழ்நாடு முதல் அமைச்சர், காரீப் 2022-23 பருவத்திற்கான நெல் கொள்முதலை 1 செப்டம்பர் 2022 முதற்கொண்டு மேற்கொள்ள, இந்தியப் பிரதமரைக் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் காரீப் 2022-23 பருவத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையாக சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2040/- என்றும், சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2060/- என்றும் நிர்ணயித்துள்ளது.

இந்நிலையில், நெல் உற்பத்தியினைப் பெருக்கும் வகையிலும், விவசாயிகளின் துயர்துடைத்தும், மேலும் ஊக்கப்படுத்தும் நோக்கோடும், தமிழ்நாடு அரசு சென்ற ஆண்டை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.75/-ம், சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.100/-ம் கூடுதல் ஊக்கத் தொகையாக வழங்க ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படியே, தற்போது சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2160/-என்றும் நேரடி நெலி கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு 1 செப்டம்பர் 2022 முதல் வழங்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

மேலும் படிக்க:

வட்டி மானியத்துடன் ரூ.2 கோடி கடன் வசதி: MRK.பன்னீர்செல்வம் தகவல்!

கேஸ் சிலிண்டர் விலை ரூ.96 சரிவு: மகிழ்ச்சியில் வர்த்தக பிரமுகர்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)