பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 5 July, 2022 8:11 AM IST

அமெரிக்காவில் விவசாயத்தை அழிக்கும் ஆப்ரிக்க ராட்சத நத்தை கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். குறிப்பாக அமெரிக்கர்களை இந்த நத்தை நடு நடுங்க வைத்துள்ளது.

விவசாயத்தைப் பொறுத்தவரை, உயிரினங்கள் மூலம் வரும் எதிரிகளை ஒழிப்பது, சில காலங்களில் சவால் மிகுந்ததாக மாறிவிடுகிறது. அந்த வகையில் அண்மையில் ராட்சத வெட்டுக்கிளி விவசாயிகளின் கண்ணில் விரலை விட்டு ஆட்டியது என்றே சொல்லலாம். அந்த வரிசையில் தற்போது, அமெரிக்க விவசாயிகள் நத்தையைக் கண்டு நடுங்கும் நிலை உருவாகியுள்ளது.

அந்நாட்டின் புளோரிடா மாகாணத்தில், கடந்த 2021ல் முற்றிலும் அழிக்கப்பட்ட ஆப்ரிக்க ராட்சத நத்தை மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது. இது உலகின் அதிக அழிவை ஏற்படுத்தும் நத்தையாக உள்ளது. இது 500 விதமான தாவரங்களை உணவாக உட்கொள்கிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. மேலும் இவை எலி நுரையீரல் புழு ஓட்டுண்ணியை தன் உடலில் எடுத்துச்செல்கிறது.

மூளைக்காய்ச்சல் அபாயம்

இது மனிதர்களுக்கு மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இந்த நத்தையை கண்டால் சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என புளோரிடா மாகாண அரசு தெரிவித்துள்ளது.

மண்ணின் தரம்

இந்த ராட்சத நத்தை மண்ணில் உள்ள கால்சியத்தை உறிஞ்சுவதால் மண்ணின் தரம் குறைகிறது. சுற்றுச்சூழல், விவசாயம், மனிதர்கள் என இவற்றால் மூன்றுவகை அச்சுறுத்தல் உள்ளது.

1200 முட்டைகள்

இவை ஆண்டுக்கு 1200 முட்டைகளை இனப்பெருக்கம் செய்கிறது. இது 20 செ.மீ. நீளம் 12 செ.மீ. விட்டம் வரை வளரும்.

ஒழிக்கத் திட்டம்

எனவே பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தி இந்த ராட்சத நத்தையின் செரிமானத்தைத் குறைத்து அதை அழிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நத்தையால் அமெரிக்காவில் விவசாயமே முடங்கும் ஆபத்து உருவாகியுள்ளது.

மேலும் படிக்க...

சிகரெட் பிடிக்கும் காளி- வைரல் ஆகும் விபரீதம்!

வீடு வாங்கப் பணத்திற்கு பதிலாக தர்பூசணி- மகிழ்ச்சியில் விவசாயிகள்!

English Summary: African Giant Snail-Screaming American Farmers!
Published on: 05 July 2022, 08:06 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now