பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 15 July, 2023 10:50 AM IST
Agri Chandra Sekaran clarify the Water retention system in the field

டெல்டா மாவட்டங்களில் நெல் நடவு பணி தீவிரமாக நடைபெற்ற வருகிறது. ஓரிரு இடத்தில 15 நாள் பயிராகவும், சில இடங்களில் நடவு பயிராகவும் உள்ள நிலையில் இன்னும் கடைமடைபகுதியில் நாற்றுகளாக உள்ளது.

இதனிடையே தேவையறிந்து பாசனத்திற்கான நீரினை பயன்படுத்தும் முறை குறித்து வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திர சேகரன், கிரிஷி ஜாக்ரான் இணையதளத்துடன் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அவற்றின் விவரங்கள் பின்வருமாறு-

அதிகபடியான நீர் வரத்து வருவதாலும், அடிக்கடி தற்போது மழை பெய்து வருவதாலும் நெல் பயிருக்கான நீர் பாசன விசயத்தில் விவசாயிகள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பயிரில் நீரை பாய்ச்சாலும் காய்ச்சலுமாக தண்ணிய கட்ட வேண்டும். நெற் பயிருக்கு சாரசரியாக நீர் தேவை 1100-1200 MM. இவை மண்ணின் தன்மைகேற்பவும் சாகுபடி செய்யப்படும் இரகத்தை பொறுத்தும் மாறுபடும்.

நீர் பாசனம் செய்வது எப்படி?

  • நெல் வயலில் 2.5 செ.மீ நீரை தேக்கி வைத்து அவை வற்றியவுடன் நீர் தேக்க வேண்டும்.
  • தண்ணீர் இலவசமாக கிடைக்கிறது என்று நாற்று நட்ட பருவத்தில் தேக்கி வைத்தால் பயிருக்கு (வேர்கள்) சுவாசிக்க முடியாது. வேரின் வளர்ச்சி காற்றோட்டமின்றி பாதிக்கக்கூடும்.
  • நிலத்தில் உள்ள அதிகபடியான நீர் மண்ணில் உள்ள பயிர் ஊட்டச்சத்துகளை கரைத்து மண்ணின் அடிப்பகுதியில் கொண்டு போய் பயிரின் வேருக்கு கிட்டா நிலையை அடையச் செய்யும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மேலுரம் இடும் போது எவ்வாறு?

  • மேலுரமாக தழை சாம்பல் சத்துகளை இடும்போது வயலில் உள்ள தண்ணிய வடித்து விட வேண்டும். இதில் யூரியாவை இட்டால் 2 நாட்கள் கழித்தும், அம்மோனியம் சல்பேட் உரமிட்டால் உடனே நீர் பாய்ச்ச வேண்டும்.
  • அறுவடைக்கு 10-12 நாட்களில் கண்டிப்பாக நிலத்தில் உள்ள நீரை வடித்து காய வைக்க வேண்டும். அப்படி செய்யா விட்டால் நெல்பயிரின் தாள் மடியாது பச்சையாகவே இருக்கும்.

நீர் பாயச்ச வேண்டிய முக்கிய தருணங்கள்:

  • வேர் பிடிக்கும் தருணம்
  • சிம்பு வெடிக்கும் தருணம்
  • பூக்கதிர் உருவாகும் தருணம்
  • தொண்டை கதிர் பருவம்

மேற்குறிப்பிட்ட தருணத்தில் அவசியம் வயலில் குறிப்பிட்ட அளவு நீர் தேக்க வேண்டும். தண்ணீர் தடை எற்பட்டால் மகசூல் 80% பாதிக்கும்.

கவனிக்க வேண்டியவை:

முதலில் நீர்பாசனத்தை மேடான வயலுக்கு பாய்ச்ச வேண்டும். அதற்கு பின்னர் தான் தாழ்வான பள்ள வயலுக்கு நீர் பாய்ச்ச வேண்டும். தாழ்வான வயலுக்கு மேல்மட்ட வயலிலிருந்து கசிவுநீர் வடியும். மற்ற பயிர்களை விட பொதுவாக நெல் பயிருக்கு தண்ணீர் தேவை அதிகம் தான். ஆனால் எப்போது எந்த அளவு தண்ணீரை வயலில் தேக்க வேண்டும் என்பதை அறிந்து செயல்பட்டாலே அதிகப்படியான மகசூலை காணலாம்.

மேற்குறிப்பிட்ட தகவல் தொடர்பான சந்தேகங்கள்/ முரண் ஏதேனும் இருப்பினும் அருப்புக்கோட்டையினை சேர்ந்த வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திர சேகரன் அவர்களை தொடர்புக் கொள்ளலாம். அலைபேசி எண்: 9443570289.

மேலும் காண்க:

கொய்யா சாகுபடி- 300 பழம் வரை அறுவடை செய்வது எப்படி?

English Summary: Agri Chandra Sekaran clarify the Water retention system in the field
Published on: 15 July 2023, 10:50 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now