ஆடு வளர்ப்பு தொழில்முனைவோர் சிறப்பு பயிற்சி முகாம்: 50% மானியம் பெறலாம்!
மதுரை, திருப்பரங்குன்றம் தியாகராஜல் பொறியற்கல்லூரி சாலையில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் 50% மானியத்தில் ஆடு வளர்பபு பண்ணை அமைக்க ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கான பல்கலைக்கழக சான்றிதழுடன் கூடிய ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம் வரும் 27. செப்டம்பர் 2023 புதன்கிழமை அன்று நடைபெற உள்ளது.
மேற்குறிப்பிட்ட பயிற்சியின் முடிவில் ஆடு வளர்ப்பு மற்றும் அரசு சான்றிதழும் வழங்கப்படும். விபரங்கள் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்ணை 0453 - 2483903 தொடர்புகொள்ளலாம். தொடர்புக் கொள்ள வேண்டிய நாட்கள் திங்கள் முதல் வெள்ளி. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கால்நடை வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம். முன்பதிவு மிக அவசியம்.
மகளிர் உரிமைத் தொகை பெறாதவர்கள் மேல்முறையீடு செய்ய இவ்வாறு விண்ணப்பிக்கலாம்!
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், இன்று பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் தொடங்கப்பட்டு, ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத்தலைவிகள் இனி மாதந்தோறும் வழங்கப்படவுள்ளது. இன்று காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் மாநகரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வைத்து மகளிர் உரிமைத் தொகை விடுவிக்கப்பட்டது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்ய வழிகாட்டு நெறிமுறை வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு 18 செப்டம்பர் முதல் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதார்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும்.
வாழையில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை குறித்து பயிற்சி !
புழுதேரி கிராமத்தில் அமைந்திருக்கும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையம் சார்பாக செப்டம்பர் 2023 மாத இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளன. அந்த வகையில் வருகிற, 16 ஆம் தேதி வாழையில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை குறித்து பயிற்சி வழங்கப்படவுள்ளது. தொடர்புக்கு இந்த எண்ணை 7904020969 தொடர்புக்கொள்ளலாம்.
- நடைபெறும் இடம்: வேளாண் அறிவியல் மையம், புழுதேரி கிராமம், தோகைமலை வட்டம், கரூர் மாவட்டம்.
- இப்பயிற்சியில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம்.
Millionaire Farmer Of India: MFOI பதிவு மற்றும் நியமனத்திற்கு, பின்வரும் லிங்கை கிளிக் செய்யவும்: https://millionairefarmer.in/ta/
For more info:
Parikshit Tyagi : 9891334425
Harsh Kapoor : 9891724466
Abdus Samad: 9891889588
மேலும் படிக்க:
ஆடு வளர்ப்பிற்கு 50% மானியம் பெற உதவி மற்றும் பயிற்சி: தொழில் முனைவோருக்கு அரிய வாய்ப்பு!
கால்நடை மருத்துவ முகாம் | கதிரடிக்கும் இயந்திரம் வாங்க 40% மானியம் | மஞ்சள் சாகுபடி குறித்த பயிற்சி!