விவசாயிகளுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட PM Kisan App!
PM Kisan App என்பது பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா தொடர்பான ஒவ்வொரு பிரச்சனையையும் தீர்க்கும் *ஒரு நிறுத்த தீர்வு* ஆகும், இதில் விவசாயிகள் பெறப்படும் பணம் நிலையை சரிபார்க்கலாம், வங்கி விவரங்கள் புதுப்பித்தல், மற்றும் e-kyc போன்ற பிற முக்கிய தகவல்களைப் புதுப்பிக்கலாம்.
இந்த ஆப்பினை பதிவிறக்கம் செய்த பின் உங்கள் உள்ளீடுகளை உள்ளீட்டு பதிவு செய்ய வேண்டும். இதனுள் குறிப்பிடதக்க தகவலாக நீங்கள் கிராமப்புர விவசாய அல்லது நகர்புற விவசாய என பதிவிடுவது முக்கியம். தற்போது இந்த ஆப் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே செயல்படுகிறது என்பது குறிப்பிடதக்கது
"தேனீ வளர்ப்பு தொழில்நுட்பங்கள்" குறித்த இலவச பயிற்சி!
திருவூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் தேசிய தேனீ வாரியம் மற்றும் தமிழ்நாடு பல்கலைக்கழகத்தின் கீழ் "தேனீ வளர்ப்பு தொழில்நுட்பங்கள்" குறித்த இலவச பயிற்சி செப்டம்பர் 20, 2023 முதல் செப்டம்பர் 26,.2023 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். சி. பானுமதி அவர்கள் தெரிவித்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் திருவூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் நேரிலோ அல்லது 9884876883 எண்ணிலோ தொடர்பு கொண்டு தங்கள் பெயர்களை முன்பதிவு செய்து கொள்ளவேண்டும் என திட்ட ஒருங்கிணைப்பாளர் கேட்டுக் கொண்டுள்ளார். முதலில் பதிவு செய்யும் 25 நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு கையேடு, மதிய உணவு மற்றும் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
சிறப்பாக செயல்பட்டு வரும் பசுமை புரட்சி திட்டம்!
இந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் 1930 நாற்றங்கால்களில் 5.5 கோடி நாற்றுகள் மூலம் பசுமை தமிழ்நாடு இயக்கம் பாரிய பசுமை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 45 லட்சம் நாட்களில் பசுமை வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று நம்புகிறோம் என IAS அதிகாரி Supriya Sahu அவர்கள் தெரிவித்தார். முதன்முறையாக மாநிலம் முழுவதும் 100 மரகத பூஞ்சோலை (கிராம மரங்கள்) மிஷன் அமைக்கிறது. 100 இடங்கள் கண்டறியப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை, கிருஷ்ணகிரி, கடலூர், தேனி மற்றும் பெரம்பலூர் ஆகிய இடங்களில் ஐந்து ஹைடெக் நர்சரிகள் ரூ. 3.75 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. #GreenTNMission
கிரிஷி ஜாகரன் ஏற்பாடு செய்யும் மில்லியனர் ஃபார்மர் ஆஃப் இந்தியா விருதில், உங்கள் பரிந்துரை பதிவு செய்ய வாய்ப்பு. மேலும் விவரங்கள் அறிய டிஸ்க்ரிப்ஷன் பாக்ஸ் - ஐ பார்க்கவும்.
பரிந்துரைக்க: https://millionairefarmer.in/ta/nominate-for-mfoi/ - கிளிக் செய்யவும்
மேலும் படிக்க:
மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 பெறாதவர்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு!