மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 21 May, 2021 11:24 AM IST

வேளாண் தொழில்நுட்பங்கள், மானிய விவரங்கள், பயிர் தொடர்பாக சந்தேகங்களுக்கு விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண் துறையினரை தொலைபேசி மூலம் தொடர்புக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மதுரை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் த.விவேகானந்தன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஊரடங்கால் வேளாண் அலுவலர்கள் நேரில் வர முடியாத நிலையில் இருப்பதால் தொழில்நுட்பம் மற்றும் மானிய விவரங்களை அறிய அவர்களின் மொபைல் போனில் விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்.

உதவி இயக்குநர்கள் விவரம்

கமலலெட்சுமி (மதுரை மேற்கு மற்றும் கிழக்கு)- 99760 37010, மீனாட்சி சுந்தரம் (திருப்பரங்குன்றம்) -9444356421, செல்வி (மேலூர்)-96295 55530, மதுரைச்சாமி (கொட்டாம்பட்டி)-94439 11431, வாசுகி (அலங்காநல்லூர்)-80722 45412, ராமசாமி (வாடிப்பட்டி) 93445 75225, சொர்ணபாரதி (திருமங்கலம்)-63835 63065, விமலா (டி.கல்லுப்பட்டி)-98945 04262, உல கம்மாள் (கள்ளிக்குடி)-99948 74372, சுமதி (செல்லம்பட்டி)-93847 61375, ராமசாமி (உசிலம்பட்டி)-94432 93406, சந்திரசேகர் (சேட பட்டி)-97739 78218

பயிர் தொடர்பான சந்தேகங்களுக்கு அனுகலாம்

இதேபோல், ஓசூர் வட்டார வேளாண் அலுவலர்களை விவசாயிகள் பயிர் சம்பந்தப்பட்ட சந்தேகங்களுக்கு வீட்டிலிருந்தே தொடர்பு கொள்ளும் வகையில் வேளாண் உதவி மைய தொலைபேசி எண்களை பயன்படுத்த வேண்டும் என்று ஓசூர் வேளாண் உதவி இயக்குநர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு அரசுத்துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்படாமல் உள்ளன. இச்சூழ்நிலையில் வேளாண் துறையின் மூலம் பயிர் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் சந்தேகங்களுக்கான விளக்கங் களை நேரில் தெரிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. இதை நிவர்த்தி செய்யும் பொருட்டு ஓசூர் வட்டாரத்தில் உள்ள 86 கிராமங்களுக்குட்பட்ட விவசாயிகளுக்கு துறை சார்ந்த அறிவுரை வழங்கவும், உதவிடவும் அந்தந்த பகுதிக்குட்பட்ட உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் அட்மா திட்ட பணியாளர்களின் தொலைபேசி எண்களை பயன்படுத்த வேண்டும்.

ஓசூர் ஆ.பாரதி - 9944268084, நாகொண்டப்பள்ளி டி.மாதேஷ் - 9626778959, நந்திமங்கலம் சங்கர் - 992283664, நல்லூர் ரா.ஆறுமுகம் - 9789121440, பாகலூர் சின்னசாமி - 9843714337, அட்மா திட்டம் வட்டார தொழில் நுட்ப மேலாளர் டி.சுகுணா - 9488520635 ஆகிய எண்களில் விவசாயிகள் பயிர் சம்பந்தமான சந்தேகங்களுக்கு தங்கள் பகுதிக்குட்பட்ட அலுவலர்களைதங்களுடைய வீட்டிலிருந்தே தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

மேலும் படிக்க...

மண் இல்லாமல் தோட்டம் அமைக்க ஆலோசனை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த இஞ்சினியர்!

மரவள்ளி கிழங்கு சாகுபடியில், மாவுப் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறை!

தேங்காய் விலை சரிவால், கொப்பரை உற்பத்தியில் விவசாயிகள் ஆர்வம்!

English Summary: Agricultural advice made easy, now farmers can ask doubts through phone from home itself
Published on: 21 May 2021, 11:24 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now