தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் வேளாண் மாணவர்கள் கிராமப்புற தங்கல் திட்டத்தின் கீழ் கிராமங்களுக்கு சென்று தங்கி அங்குள்ள விவசாயிகளுக்கு வேளாண்மை குறித்த பயனுள்ள தகவல்களை (Agriculture Informations) செயல்முறை விளக்கத்துடன் விரிவாக கூறி வருவருகின்றனர். வேளாண் கல்லூரி மாணவர்களின் இந்த செயல், விவசாயிகளின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விவசாயிகளுக்கு மகசூலை (Yield) அதிகரிக்க உதவும் நோக்கத்தில், வேளாண் மாணவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
பட்டுப்புழு வளர்ப்பு மேலாண்மை
காங்கயம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் மாணவர்கள் பயிற்சி (Training) எடுத்து வருகின்றனர். காங்கயம் அருகே உள்ள படியாண்டிபாளையம் புதூரை சேர்ந்த விவசாயி தங்கவேல் (Thangavel) என்பவரின் தோட்டத்திற்கு சென்று பார்வையிட்டு பட்டுப்புழு வளர்ப்பு (Silkworm rearing) குறித்த மேலாண்மை முறைகளை எடுத்துரைத்தனர்.
மேலும் பட்டுப்புழுவை அதிகம் தாக்கக்கூடிய பிளாக்கரி நோயின் விளைவுகளையும், அதனை கட்டுப்படுத்தும் முறைகளையும் (Control methods) விவசாயிகளுக்கு செயல்விளக்கத்துடன் எடுத்துக்கூறினர். மேலும் இந்த பிளாக்கரி நோயானது 15 முதல் 20 சதவீதம் சேதத்தை உண்டாக்கக்கூடியது.
இதனை இயற்க்கை முறையில் கட்டுப்படுத்த கார்போகரிசி செடியின் இலைச்சாற்றை மல்பெரி இலைகளின் மீது தெளித்து பின் பட்டுப்புழுவிற்கு உணவாக கொடுப்பதால் இந்தநோயின் தாக்கம் குறையும் என்பதையும் எடுத்துக்கூறினர்.
வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள், வருடந்தோறும் விவசாயிகளின் நிலத்திற்கு நேரடியாக சென்று கள ஆய்வுகளையும் மேற்கொள்வது வழக்கம். நேரடியாக கள ஆய்வை மேற்கொள்ளும் போது மாணவர்களுக்கு உதவிகரமாக இருக்கும். இதற்கு முன்பு வேளாண் கல்லூரி மாணவிகள், அரசு பள்ளி ஆசிரியர் விளைவித்த பாரம்பரிய நெல்லை அறுவடை (Harvest) செய்தது குறிப்பிடத்தக்கது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
கோடையில் நாட்டுக்கோழிகளை பராமரிப்பதன் அவசியம்!
காய்கள் கனிந்துள்ளனவா எனக் கண்டறிய லேசர் தொழில்நுட்பம்!