தஞ்சை மாவட்டம் ஈச்சங்கோட்டையில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் கல்லூரி முதல்வர் வேலாயுதம் மற்றும் இணை பேராசிரியர் ஆனந்தராஜா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நீடாமங்கலம் அருகே சித்தமல்லியில் களப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக முட்டை மற்றும் உப்பை பயன்படுத்தி நெற்பதர்களை நீக்கும் முறை மற்றும் பஞ்சகாவ்யா தயாரிக்கும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு நேரடி செயல் விளக்கம் அளித்தனர்.
வேளாண் பயிற்சி (Agriculture Training)
செயல் விளக்கப் பயிற்சியில் மாணவிகள் பஞ்சகாவ்யா பயன்படுத்தினால் ஏற்படும் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர். முட்டை மற்றும் உப்பை பயன்படுத்தி நெற்பதர்களை நீக்கும் முறையை தெளிவாக எடுத்துக் கூறினர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் செந்தமிழ்ச்செல்வன், விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இயற்கை வேளாண்மை செய்ய வேண்டியதன் அவசியம், இயற்கை வேளாண்மை பணி அனுபவம் மற்றும் செயல் விளக்க பயிற்சி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இப்பயிற்சி விவசாயிகளுக்கு பெரிதும் உதவியாக அமையும்.
இதுபோன்ற வேளாண் பயிற்சிகள், இளைய தலைமுறையினருக்கு விவசாயத்தின் மீதுள்ள ஆர்வத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், பல்வேறு விவசாய நுணுக்கங்களையும் அறிந்து கொள்கின்றனர். இப்பயிற்சியின் மூலம், விவசாயிகள் இயற்கை உரங்களை எவ்வாறு உபயோகமாக பயன்படுத்துகிறார்கள் என்பதை கண்ணாரக் காண முடியும்.
மேலும் படிக்க