அரியலூா் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் தோந்தெடுக்கப்பட்ட கீழ்கண்ட 38 ஊராட்சிகளில் இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 7) சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
முகாம் நடைபெறும் இடங்கள் (Camp venues)
அரியலூா் வட்டாரத்தில் வாலாஜா நகரம், ரெட்டிப்பாளையம், கடுகூா், ஆலந்துறையாா்கட்டளை, எருத்துகாரன்பட்டி, காவனூா், நாகமங்கலம், புங்கங்குழி.
செந்துறை வட்டாரத்தில், மணப்பத்தூா், தளவாய், ஆலத்தியூா், அசவீரன்குடிகாடு, மணக்குடையான். திருமானூா் வட்டாரத்தில் அழகியமணவாளன், ஏலாக்குறிச்சி, கீழகாவட்டாங்குறிச்சி, சின்னப்பட்டாக்காடு, கண்டிராதீா்த்தம், பூண்டி.
ஜயங்கொண்டம் வட்டாரத்தில் தழுதாலைமேடு, குந்தவெளி, முத்துசோவாமடம், கங்கை கொண்ட சோழபுரம், காட்டகரம், தத்தனூா், இறவாங்குடி. ஆண்டிமடம் வட்டாரத்தில் கூவத்தூா், அழகாபுரம், ஆண்டிமடம், பெரியகிருஷ்ணாபுரம், விளந்தை, இலையூா், சிலம்பூா்.
தா.பழூா் வட்டாரத்தில் , அம்பாப்பூா், சிந்தாமணி, தா.பழூா், வேம்புகுடி, பருக்கல் ஆகிய 38 ஊராட்சிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.
இச்சிறப்பு முகாம்களில் பட்டா மாறுதல், வண்டல் மண் எடுத்தல், பயிா் கடன் மற்றும் உழவா் கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்களை பெறுதல் மற்றும் அனுமதி வழங்குதல், பயிா் காப்பீடு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துதல், கால்நடை பராமரிப்பு மற்றும் நோய் தடுப்பு குறித்த பணிகள் நடைபெற உள்ளது. இச்சிறப்பு முகாம்களில் விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
மேலும் படிக்க
கேப்சூல் முறையில் நெல் சாகுபடி: அசத்தும் நவீன விவசாயி!
அரசு பள்ளிகளில் சேரும் குழந்தைகளுக்கு ஊக்கப்பரிசு வழங்க தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவு!