விவசாயிகள் நம் நாட்டின் முதுகெலும்பு என்றபோதிலும், இவர்களது உழைப்பை சுரண்டுவதையேத் தொழிலாகக் கொண்டு வாழ்க்கை நடத்துகிறார்கள் இடைத்தரகர்கள்.
இடைத்தரகர்கள் (Intermediaries)
விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களை அடிமாட்டுவிலைக்கு வாங்கி வணிகர்களிடம் அதிக விலைக்கு விற்பனை செய்து லாபம் ஈட்டுவதே இவர்களின் வேலை. ஆக இந்த இடைத்தரர்கள் இல்லாமல், விவசாயிகள் தங்கள் பொருட்களை நேரடியாக வணிகர்களிடம் விற்பனை செய்வதற்காகவே, e-NAM சந்தை உருவாக்கப்பட்டுள்ளது.
3350 வணிகர்கள் (3350 merchants)
இந்தியாவில் விவசாயப் பொருட்களை ஆன்லைன் வர்த்தக தளமான சி.ஹிபுனி என்ற தளம் 14.04.2016ல் தொடங்கப்பட்டது. e-NAM என்றால் தேசிய மின்னணு வேளாண் சந்தை என்று அர்த்தம். இது நமது நாட்டினுள்ள 18 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் உள்ள 1000 ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் நடைமுறை படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்திலுள்ள 63 ஒழுங்கு முறை விற்பனைகூடங்களில் e-NAM சந்தை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் 3350 வணிகர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த வலை தளத்தின் வாயிலாக விற்பனை செய்யப்படும், காய்கறி மற்றும் பழங்கள் தவிர அனைத்து விளை பொருட்கள், தானியங்கள், பருப்பு வகைகள் எண்ணெய் வித்து பொருட்கள், பருத்தி இன்னும் பல.
SFAC
விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யப் பட்ட பொருட்களை இந்த ஆன்லைன் வலைதளத்தின் மூலமாக பதிவு செய்து இடைத்தரகர் இல்லாமல் வணிகர்களை தொடர்பு கொள்ள முடியும். இந்த வலைத்தமான SFAC என்ற வேளாண் வணிகத் துறையின் கீழ் இயங்கும் சிறு விவசாயிகளுக்கான வணிக உட்கட்டமைப்பு நிர்வகிக்கிறது.
மண்டிகள் மூலமாக வெளிபடைத்தன்மை, விலை பற்றி உண்மையான தகவல் அறிதல் விரிவான வங்கி பரிமாற்றம், உற்பத்திக்கான தரத்திற்கு இணையான விலை, வெளிப்படையான ஏலம் மூலமாக கிடைக்கிறது.
சரியான விலை (Perfect price)
ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் (மண்டியில்) வைக்கப் பட்ட விளைபொருட்களுக்கு லாட் எண் கொடுக்கப்பட்டு விலை விபரங்கள் விவசாயிகளுக்கு அலைபேசி வாயிலாக தெரியப் படுத்தப்படும்.
இதனை அறிந்த கொண்ட பின்னர் கட்டுபடியான விலைக்கு பொருட்களை விற்பனை செய்ய முடிகிறது.
தகவல்
அக்ரி சு.சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
94435 70289
மேலும் படிக்க...