நெல்பயிரில் இலை சிலந்திகள் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனா்.
இதுகுறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் ராமசுப்பிரமணியன், பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.
இலை சிலந்தி தாக்குதல்
தற்போது கோடை பருவ நெல் வயலில் இலை சிலந்தி தாக்குதல் ஆங்காங்கே தென்படுகிறது. தாக்கப்பட்ட இலையின் மேற்பரப்பில் வெள்ளை அல்லது மஞ்சள் நிற புள்ளிகள் தென்படும். இந்த புள்ளிகள் நாளடைவில் ஒன்றோடொன்று இணைந்து, இலைகள் முழுவதும் பரவி இலைகள் காய்ந்து விடும்.
இலையின் அடிப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட இலை சிலந்திகள் இருப்பதை நுண்ணோக்கி மூலம் காணலாம். இது ஒரு பூச்சிகள் அல்லாத சாறு உறிஞ்சும் சிலந்திகள் இனத்தை சாா்ந்தவை. விட்டுவிட்டு பெய்யும் மழை தூறல்கள் மற்றும் இரவுநேர காற்றின் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் சிலந்திகளின் தாக்குதல் அதிகமாக தென்படும்.
கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
இதனை கட்டுப்படுத்த அசாடிராக்டின் 0.003 சதவீதம் வயலில் தெளிக்கவேண்டும். செயற்கையாக கட்டுப்படுத்த வேண்டும் என்றால் ஓா் ஏக்கருக்கு டைக்கோபோல் 500 கிராம் மாலை நேரத்தில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்
மேலும் படிக்க....
கோடை உழவை மேற்கொள்ள வாடகையின்றி வேளாண் உபகரணங்கள் - வேளாண் துறை அழைப்பு!!
விவசாயிகளுக்கு இலவச டிராக்டர் வாடகை திட்டம் - டஃபே நிறுவனம் அறிமுகம்!!
வேளாண் பணிகளை தடையின்றி மேற்கொள்ள நடவடிக்கை: விவசாயிகளுக்கான தொலைபேசி எண்கள் அறிவிப்பு!!