மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 20 August, 2021 12:20 PM IST
Agriculture: Rs. 5 lakhs Top 10 tractors ! Full details

டிராக்டர் ஒரு முக்கியமான விவசாய வாகனம் ஆகும். இது உழவு, நடவு போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது, ஆனால் நிதி பிரச்சனையால் பல விவசாயிகளிடம் டிராக்டர் இல்லை. டிராக்டர்கள் விலை உயர்ந்தவை மற்றும் அவற்றின் வரவு செலவுத் திட்டத்திற்கு அப்பாற்பட்டவை என்ற தவறான எண்ணம் விவசாயிகளுக்கு உள்ளது. ஆனால் தற்போது சந்தையில் பல குறைந்த பட்ஜெட் டிராக்டர்கள் உள்ளன  விவசாயிகளுக்கு தெரியவில்லை. இன்று இந்த கட்டுரையில் சில பொருளாதார டிராக்டர்களைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

சிறந்த டிராக்டர்கள் வெறும் ரூ. 5 லட்சம்

ரூ.5 லட்சத்திற்கு கீழ் விவசாயிகள் பெறக்கூடிய சிறந்த மற்றும் குறைந்த பட்ஜெட் டிராக்டர்களை ஆராய்வோம்.

சோனலிகா டிஐ 734 (எஸ் 1) (Sonalika DI 734 (S1) )

சோனலிகா டிஐ 734 மிகவும் வலுவான பொறி இயந்திரம் கொண்டுள்ளது, இந்த டிராக்டரில் உள்ள சிறந்த அம்சம் எரிபொருள் சிக்கனம். இந்த டிராக்டர் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்டது & நமது பட்ஜெட்டிற்குள் வரக்கூடியது. எனவே, நீங்கள் 5 இலட்சத்திற்கு கீழ் ஒரு டிராக்டர் வாங்க விரும்பினால், இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

செலவு - ரூ 4.92 லட்சம் மட்டுமே.

ஹெச்பி - 34 ஹெச்பி

மேலும் விவரங்களுக்கு கிளிக் செய்யவும் - https://www.sonalika.com/

மஹிந்திரா 265 டிஐ (Mahindra 265 DI )

மேலும் ரூ. 5 லட்சத்திற்கு கீழ் கிடைக்கும் மற்றொரு டிராக்டர் மஹிந்திரா 265 டிஐ 30 ஹெச்பி ஆகும். கூடுதலாக, மஹிந்திரா 265 டிஐ ட்ராக்டருக்கு பராமரிப்பு செலவு மிகவும் குறைவு, இது விவசாயிகளின் சுமையை குறைக்கிறது. இந்த டிராக்டருக்கு அதிக மறுவிற்பனை மதிப்பு உள்ளது. இது விவசாயிகளுக்கு சரியான தேர்வாக அமையும்.

செலவு - ரூ 4.60 முதல் 4.90 லட்சம் மட்டுமே.

ஹெச்பி - 30 ஹெச்பி

மேலும் விவரங்களுக்கு கிளிக் செய்யவும் - https://www.mahindratractor.com/

பவர்டிராக் 425 என் (Powertrac 425 N)

இந்த டிராக்டர் விவசாயத்திற்கு மட்டுமல்ல, கூடுதல் வருமானத்திற்கும் பயன்படுத்தலாம். பவர்ட்ராக் 425 N மல்டி டாஸ்கர் டிராக்டர் என்றும் அழைக்கப்படுகிறது. நவீன டிராக்டர் தேவைப்படுபவர்களுக்கு இது சரியான டிராக்டர்.

செலவு - ரூ 3.30 லட்சம்*.

ஹெச்பி - 25 ஹெச்பி

மேலும் விவரங்களுக்கு கிளிக் செய்யவும் - http://www.escortstractors.com/

எய்ச்சர்  242 (Eicher 242)

எய்ச்சர் 242 விவசாயிகளுக்கு மற்றொரு மலிவான விலைக்கு கிடைக்கும் டிராக்டர் இது. ரூ. 4 லட்சத்திற்கு கீழ் டிராக்டர் தேடுபவர்களுக்கு இது ஒரு சிறந்த வழி ஆகும். வெறும் ரூ.4 லட்சத்தில் அனைத்து மேம்பட்ட அம்சங்களையும் கொண்டுள்ள டிராக்டர்.

செலவு - ரூ 3.85 லட்சம் மட்டுமே

ஹெச்பி - 25 ஹெச்பி

மேலும் விவரங்களுக்கு கிளிக் செய்யவும் - https://eichertractors.in/

குபோடா நியோஸ்டார் B2441 4WD (Kubota Neostar B2441 4WD)

குபோடா நியோஸ்டார் பி 2441 4WD  டிராக்டர் மலிவு விலையில் கிடைக்கும் மற்றும் எரிபொருள் சிக்கண்ண செயல்திறனுக்காக பிரபலமாக கூறப்படுகிறது.  இந்த டிராக்டர் பழத் தோட்டங்களில் பயன்படுத்துவதற்கு   சிறப்பு வாய்ந்ததாகும், இது பயன்படுத்துவதற்கு நம்பக தன்மை கொண்டது மற்றும் பராமரிக்க எளிதானது. மேலும் விவசாயிகளின் பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் டிராக்டர் ஆகும்.

செலவு - ரூ 4.99 லட்சம் மட்டுமே

ஹெச்பி - 24 ஹெச்பி

மேலும் விவரங்களுக்கு கிளிக் செய்யவும் - https://www.kubota.co.in/products/tractor/index.html

மெஸ்ஸி பெர்குசன் 1030 DI மஹா சக்தி (Massey Ferguson 1030 DI MAHA SHAKTI)

பழத்தோட்டம் சாகுபடிக்கு டிராக்டர் வாங்க விரும்புவோருக்கு இந்த டிராக்டர் சரியானது. மெஸ்ஸி பெர்குசன் 1030 DI மஹா சக்தி டிராக்டர், மாம்பழம், திராட்சை, ஆரஞ்சு மற்றும் சோயாபீன், சோளம், பருத்தி, கரும்பு போன்ற பயிர்களுக்கு ஏற்றது.

செலவு - ரூ .4.50 முதல் 4.80 லட்சம் மட்டுமே

ஹெச்பி - 30 ஹெச்பி

மேலும் விவரங்களுக்கு கிளிக் செய்யவும் - https://masseyfergusonindia.com/massey-ferguson/

ஸ்வராஜ் 724 எக்ஸ்எம் (Swaraj 724 XM)

இந்திய டிராக்டர் சந்தையில் நல்ல நிலையை கொண்ட ஸ்வராஜ் டிராக்டர்கள் விவசாயிகளின் பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் டிராக்டர் வகைகளில் ஒன்று. மேலும் சந்தேகமே இல்லை,  தற்போது ஸ்வராஜ் டிராக்டர் விவசாயிகளிடையே மிகவும் பிரபலமான பிராண்ட் ஆகும். ஸ்வராஜ் 724 எக்ஸ்எம் வித்தியாசமானது. விளைச்சல் செய்த பொருட்களை எடுத்து செல்லவும் மற்றும் பிற விவசாயக் கருவிககளை பொருத்துவதற்கும் ஏற்றதாக அமைகிறது.

செலவு - ரூ 3.75 லட்சம் மட்டுமே

ஹெச்பி - 25 ஹெச்பி

மேலும் விவரங்களுக்கு கிளிக் செய்யவும் - https://www.swarajtractors.com/

மஹிந்திரா ஜீவோ 225 டிஐ (Mahindra JIVO 225 DI)

இது விவசாயிகளின் தேவைகளுக்கு ஏற்ப முக்கியமாக உருவாக்கப்பட்ட ஒரு சிறிய டிராக்டர். மஹிந்திரா ஜீவோ 225 டிஐ ட்ராக்டருக்கு  நல்ல செயல்திறன் மற்றும் சிறந்த மைலேஜ் கொண்டுள்ளது.

செலவு - ரூ 2.91 லட்சம் மட்டுமே

ஹெச்பி - 20 ஹெச்பி

மேலும் விவரங்களுக்கு கிளிக் செய்யவும் - https://www.mahindratractor.com/

ஸ்வராஜ் 717 (Swaraj 717)

ஸ்வராஜ் 717 ஒரு சிறிய ஆனால் மிகவும் சக்திவாய்ந்த டிராக்டர். வலுவான கட்டமைக்கப்பட்ட அல்லது சக்திவாய்ந்த டிராக்டரை ரூ. 5 லட்சத்திற்கு கீழ் தேடுபவர்களுக்கு இது சரியான தேர்வாகும்..

செலவு - ரூ 2.60 முதல் 2.85 லட்சம் மட்டுமே.

ஹெச்பி - 15 ஹெச்பி

மேலும் விவரங்களுக்கு கிளிக் செய்யவும் - https://www.swarajtractors.com/

எனவே, இவை ரூ.5 லட்சதிற்கு கீழ் விவசாய நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் சில சிறந்த டிராக்டர்கள். ஏதேனும் குறிப்பிட்ட டிராக்டர் பற்றிய கூடுதல் விவரங்களை நீங்கள் விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப் பெட்டி மூலம் எங்களுக்கு  தெரிவியுங்கள்

மேலும் படிக்க...

Kisan Tractor Subsidy Scheme: டிராக்டர் வாங்க மாநில அரசு தள்ளுபடி வழங்கல்- விவசாயிகளே புத்திசாலிதனமாக திட்டதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்

English Summary: Agriculture: Rs. 5 lakhs Top 10 tractors ! Full details
Published on: 20 August 2021, 12:20 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now