பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 30 October, 2023 12:52 PM IST
black wheat

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் கருப்பு கோதுமை பயிரிட விவசாயிகளை ஊக்குவித்து வருகின்றனர் வேளாண் துறை அதிகாரிகள். இதன் மூலம் அவர்களின் வருமானம் அதிகரிக்கும் எனவும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

கருப்பு கோதுமை பஞ்சாபின் மொஹாலியில் உள்ள தேசிய வேளாண்-உணவு பயோடெக்னாலஜி இன்ஸ்டிடியூட் (NABI) விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய கோதுமை வகைகளுடன் ஒப்பிடுகையில், கருப்பு கோதுமை சிறந்த ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் அதிக சந்தை மதிப்பு கொண்டதாக அறியப்படுகிறது.   

அக்டோபர் 24, 2023 அன்று ஊடகங்களில் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, உத்தரகாசி மாவட்ட மாஜிஸ்திரேட் அபிஷேக் ரூஹெலா, துண்டா தொகுதியின் ஜென்வாலா கிராமத்தில் கருப்பு கோதுமை சாகுபடியில் சேர விவசாயிகளை ஊக்குவித்து கருப்பு கோதுமை விதைகளை விநியோகித்துள்ளார்.

சாதாரண கோதுமையை விட சுமார் 3 மடங்கு அதிகமான வருமானத்தை கருப்பு கோதுமை மூலம் விவசாயிகள் பெற இயலும் என்கிற நோக்கத்துடன்  உத்தரகாசி மாவட்டத்தில் துண்டா மற்றும் நவ்கான் தொகுதிகளில் உள்ள 20 கிராமங்களில் முன்னோடி திட்டமாக இது தொடங்கப்பட்டுள்ளது. முன்னதாக, இதே மாவட்டத்தில் உள்ள கங்கை பள்ளத்தாக்குக்கு பகுதியில் சிகப்பு அரிசியினை பயிரிடும் முயற்சிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. அதனைத் தொடர்ந்து தற்போது குறிப்பிடத்தக்க வகையில், நாட்டின் சில தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் கருப்பு கோதுமை சாகுபடி நடைமுறை தொடங்கியுள்ளது.

கருப்பு கோதுமையின் பயன்கள்: கருப்பு கோதுமையில் பாஸ்பரஸ் நல்ல அளவில் உள்ளது. மேலும் கருப்பு கோதுமையில் உள்ள புரதம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் மனித உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கின்றன மற்றும் இரத்த பற்றாக்குறையை நீக்கி ஆக்ஸிஜனின் அளவைக் கட்டுப்படுத்துகின்றன.

"பாரம்பரிய கோதுமை வகைகளின் மதிப்பு காலப்போக்கில் குறைந்துவிட்டது, குறிப்பாக மலைப்பகுதிகளில், அரசு உணவுப் பாதுகாப்புத் திட்டங்களின் மூலம் பலர் குறைந்த அல்லது விலையற்ற உணவு தானியங்களைப் பெறுகிறார்கள்" என்று உத்தரகாசியின் தலைமை வேளாண் அதிகாரி ஜே.பி. திவாரி கூறினார். ”அதிக போக்குவரத்து செலவுகள் மற்றும் குறைந்த குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) காரணமாக முக்கிய நகரங்களில் உள்ள மொத்த சந்தைகளில் உணவு தானியங்களை விற்பது பெரும்பாலும் லாபகரமானதாக இல்லை” எனவும் திவாரி தெரிவித்துள்ளார்.

"இதைக் கருத்தில் கொண்டு, கருப்பு கோதுமை மற்றும் சிவப்பு அரிசி போன்ற பாரம்பரிய பயிர்களுக்கு வணிக மாற்றுகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் மாவட்டத்தில் புதிய விவசாய முறைகளை மேம்படுத்துவதில் வேளாண்துறை கவனம் செலுத்துகிறது," என்று திவாரி கூறினார்.

இந்திய அரசாங்கம் திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ் வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் கோதுமைக்கான ஏலக் கொள்முதல் அளவினை 200 டன்னாக உயர்த்தியுள்ளது. இதன் மூலம் கோதுமை விலை உயர்வினை கட்டுப்படுத்தவும், சந்தையில் இருப்பினை அதிகரிக்கவும் முடியும் என அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more :

கயிலாங்க் கடை பொருட்கள் மூலம் காரை உருவாக்கிய இயற்கை விவசாயி

நபார்டு வங்கி நிதியுதவியுடன் 40 நவீன நெல் சேமிப்புத் தளம்- அரசாணை வெளியீடு!

English Summary: Agriculture sector giving importance to black wheat
Published on: 30 October 2023, 12:52 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now