திருந்திய நெல் சாகுபடி முறை என்பது சாதாரண நெல் சாகுபடி முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி குறைந்த செலவில் அதிக மகசூலை பெறும் வகையில் உருவாக்கப்பட்ட முறை ஆகும்.
நெல் தீவிரப்படுத்தும் முறை (SRI) சாகுபடி:
• நர்சரி மேலாண்மை
• நாற்று தூக்குதல்
• முக்கிய கள தயாரிப்பு
• நடவு செய்தல்
• நீர்ப்பாசன மேலாண்மை
• களை மேலாண்மை
• ஊட்டச்சத்து மேலாண்மை
கொள்கைகள்:
* நன்கு தூய்மையான நெல் விதைகளை பாய் நாற்றாங்கால் முறையில் நாற்றுகளை வளர்க்க வேண்டும்.
* 10 முதல் 15 நாட்கள் வயதுடைய இளம் நாற்றுகளை ஒற்றை நாத்து நடவு முறையில் 25 செ.மீ × 25 செ.மீ என்ற இடைவெளியில் நட வேண்டும்.
* நீர் பாசனத்தை பொருத்தவரை "நீர் மறைய நீர் பய்ச்சுதல்' வேண்டும்.
* சுழல் உருளை களை எடுக்கும் கருவியை கொண்டு 12 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை களை எடுத்தல்.
* இலை வண்ண அட்டையை (LCC)கொண்டு பயிரின் தேவைக்கு ஏற்ப தழை சத்து (N) அளிக்க வேண்டும்
* உரத்தை பொருத்தவரை தொழுஉரம் , மண்புழு உரம் போன்ற இயற்கை உரங்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும்.
திருந்திய நெல் சாகுபடி முறையின் பயன்கள்:
• அதிக தூர் வெடிக்கும் வீரியம்
• அதிக தூர் வெடிக்கும் காலம்
• அதிக இடைவெளியில் ஒற்றை நாற்று சதுர நடவு
• செடிகளுக்கிடையே போட்டி குறைவு
• அதிக தூர் வெடித்தல்
• களைக் கருவி உபயோகித்தல்
• மண் கிளறி விடப்படுதல்
• பயிர் வளர்ச்சி ஊக்குவிப்பு
• நுண்ணுயிர்கள் ஊக்குவிப்பு
• சிக்கன நீர்ப் பாசனம்
• மண்ணில் காற்றோட்டம்
• 40 - 50 சதவீதம் நீர் சேமிப்பு
• ஒருங்கிணைந்த உர நிர்வாகம்
• அதிக நுண்ணுயிர்கள் செயல்பாடு
• அதிக கூட்டுப் பயன்
திருந்திய நெல்சாகுபடி (SRI) முறையை விவசாயிகள் ஏன் கடைபிடிக்க வேண்டும்?
• குறைந்த சாகுபடிச் செலவு
• ஏக்கருக்கு 2-3 கிலோ விதை போதுமானது.
• ஏக்கருக்கு 1 சென்ட் நாற்றங்கால் போதுமானது.
• குத்துக்கு ஒரு நாற்று போதுமானது.
• ஒரு சதுர மீட்டருக்கு 16 குத்துகள் போதுமானது.
• களையைக் கட்டுப்படுத்த களைக் கருவி உபயோகிப்பதால்
ஆட்செலவு குறைவு
• களைக் கருவி உபயோகிப்பதால் பயிர் வளர்ச்சி அதிகமாகிறது.
• வயலில் நீரைத் தேக்கி வைக்க வேண்டியஅவசியமில்லை
• பாசன நீர்த் தேவை 40 - 50 சதவீதம் குறைவு
• நீர்ப்பாசனத்திற்கான மின்சாரச் செலவு குறைவு
• அதிக வேர் வளர்ச்சி
• அதிக வெள்ளை நிறப் பணியாற்றும் வேர்கள்
• அதிக ஊட்டச்சத்து உபயோகத் திறன் அதிக தூர்கள்
• அதிக கதிர்கள், அதிக மணிகள்
• பயிருக்கு சாயாத தன்மை அதிகமாகிறது.
• அதிக தானிய வைக்கோல் மகசூல்
• அதிக லாபம்
மேலும் விபரங்களுக்கு:
திரு.சூர்யா மனோகரன், இளங்கலை வேளாண் மாணவன் மற்றும்
முனைவர் பா.குணா, இணைப் பேராசிரியர்,
வேளாண் விரிவாக்க துறை, நாளந்தா வேளாண்மைக் கல்லூரி, எம்.ஆர்.பாளையம், திருச்சி.
மின்னஞ்சல் baluguna8789@gmail.com. தொலைபேசி எண் : 9944641459 ஆகியோரை தொடர்புகொள்ளலாம்
மேலும் படிக்க:
பூ உதிர்வை தடுக்கும் தேமேர் கரைசல் : தயாரிக்கும் முறை இதோ!
ஹ்யூமிக் அமிலம்: மட்கிய அறிவியல் மற்றும் அது மண்ணுக்கு எவ்வாறு பயனளிக்கும்