முக்கனிகளுள் முதன்மையானதாகக் கருதப்படும் மாம்பழத்தை ருசிக்காதவர் என்று யாரும் இருக்க வாய்ப்பு இல்லை. அந்த அளவுக்கு ருசிப்பவர் மனதில் என்றும் மாம்பழத்தின் சுவை நிலைத்திருக்கும். இத்தகைய சிறப்பு வாய்ப்பு மாமரத்தில் தற்போது, பூக்கும் பருவம். அவ்வாறு பூக்கள் நன்றாக பூப்பதற்கு அடிப்படையில் ஒரு சில சத்துக்கள் வேண்டும். அந்த சத்துக்கள் இருந்தால் இருக்கக்கூடிய கொத்து பூவில் எது திறமையான பூவோ, அந்த பூ எளிமையாக சூழ்பிடிச்சு நமக்கு கனியாக மாறும்.
இதை அதிகப்படுத்துவதற்கு இயற்கை விவசாயத்தில் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்ள விரும்புபவரா நீங்கள்?. அப்படியானால் இந்த செய்தி உங்களுக்குதான். பஞ்சகாவியா, தேமோர் கரைசல் , ஈ எம் கரைசல் போன்ற இயற்கை மருந்துகளைத் தெளிக்கலாம் .
மகரந்த சேர்க்கைக்கு
இதை எப்படி தெளிக்கவேண்டுமென்றால் 10 லிட்டருக்கு 200 மில்லி ஈ .எம் கரைசல் அல்லது 10 லிட்டருக்கு அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் வரை தேமோர் கரைசல் பயன்படுத்தலாம். இதை நேரடியாக பூக்கள் மீது அடிக்காமல் கொஞ்சம் தள்ளி, பொழிகிற மாதிரி அமைப்கள்ள பூக்கள் மீது தெளிப்பது நல்லது. இவ்வாறு செய்வது, மகரந்த சேர்க்கை நடை பெறுவதற்கு உதவியாக இருக்கும் , அதாவது அதன் வாடை தேனீக்களை கவர்ந்து இழுப்பதற்கு வாய்ப்பாக இருக்கும் .
பஞ்சகாவியா
இப்படி தெளிப்பதால் பூக்களுக்கு ஆரம்பகால சத்துக்கள் கொடுப்பதற்கு பெரிய வாய்ப்பாக இருக்கும் . அதேநேரத்தில் மற்றவற்றை விட பஞ்சகாவிய தெளிப்பதால் மாமரத்தில் ஏதாவது பிரச்சனை இருந்தாலும் அதை சரி செய்து பூக்கவைப்பதில் அதன் பங்கு மிக முக்கியம் . பஞ்சகவ்யாவில் உள்ள 40 சதவீதம் சூடோமோனஸ் இந்த வேலையைச் செய்கிறது. இதை பூக்கள் பூக்க ஆரம்பித்ததிலிருந்து, காய் சுண்டுவிரல் அளவு வளரும்வரைக்கும் ஒரு மூன்று அல்லது நான்கு தடவை கொடுக்கலாம். இந்த இயற்கை மருந்துக்கு கொஞ்சம் செலவு அதிகம்தான். ஆனால் நல்ல பலன் கொடுக்கும் . முடியவில்லை எனில் தாராளமாக தேமோர் கரைசல் கொடுக்கலாம்.
Read More...
கோவையில் 25% மானியத்தில் சுயதொழில் கடன் மேளா! இளைஞர்களுக்கு அழைப்பு!
மத்திய அரசின் புதிய PLI திட்டம்! ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு