பண்ணைகளில் பயிர் செடிகளை வளர்த்து வரும் போது பூச்சித் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டியுது இயல்பான ஒன்றே. துளைப்பான், குறுத்து துளைப்பான், பழம் துளைப்பான் மற்றும் வேறு சில பூச்சிகளும் நம் பயிர் செடி, கொடிகளை தாக்கி வருகிறது. இத்தைகைய பெரிய சிறிய பூச்சிகளை விரட்ட சில இயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ளது உங்களுக்கு தெரியுமா?
அற்புதமான இயற்கை பூச்சிக்கொல்லி மருந்து ஒன்று உள்ளது தெரியுமா? அது "நீமஸ்த்ரா" (Neemastra) . அதை வீட்டியலேயே எளிதாக தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள் - Ingredients Required
-
சிறிதாக நறுக்கப்பட்ட வேப்பிலை 100 கிராம்
-
கரஞ்ச் இலைகள் 100
-
நறுக்கப்பட்ட கஸ்டர்ட் ஆப்பிள் இலைகள் 100 கிராம்
-
நறுக்கப்பட்ட ஆமணக்கு 100 கிராம்
-
தாதுரா இலைகள் 100 கிராம்
-
மாட்டு சிறுநீர்
தயாரிப்பது எப்படி? - How to Prepare?
-
படி 1- மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு பிளாஸ்டிக் அல்லது சிமென்ட் ஜாடியில் கலந்து, ஒரு தடி அல்லது மரக்குச்சியின் உதவியுடன் நன்றாக கிளறவும்.
-
படி 2- நன்றாக கலவைக்கு பிறகு, கலவையை கொதிக்க வைக்க வேண்டும்.
-
படி 3- அதன் பிறகு, ஜாடியை பாலி-நெட் அல்லது சணல் கொண்டு மூடி வைக்கவும். அதை நேரடியாக சூரிய ஒளி மற்றும் மழைநீர் படாத வகையில் நிழலில் வைக்க வேண்டும்.
-
படி 4- கலவையை இரண்டு நாட்களுக்கு தொடர்ச்சியான ஒரு நிமிடம் அல்லது இரண்டு மற்றும் ஒரு நாளைக்கு இரண்டு முறை கிளறவும்.
-
படி 5- இரண்டு நாட்களுக்குப் பிறகு, கலவையை வடிகட்டி, கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் ஜாடி அல்லது பாட்டில்களில் கலவையை எடுத்து வைத்து பயன்படுத்தலாம்.
பயன்படுத்துவது எப்படி? - How to Use?
ஒரு ஏக்கர் நிலத்திற்கு 200 லிட்டர் தண்ணீருடன் 6 முதல் 8 லிட்டர் நீமஸ்த்ரா கலவையை பயன்படுத்தலாம். ஒரு ஸ்ப்ரே அமைப்பின் உதவியுடன் தாவரங்கள் மற்றும் பயிர்கள் மீது கலவையை நன்கு தெளிக்க வேண்டும்.
காலாவதியாகும் காலம் - Expiry
வீட்டில் தயாரிக்கப்பட்ட நீமஸ்த்ரா கலவையை 6 மாதங்கள் வரை சேமித்து வைத்து பயன்படுத்தலாம். எளிமையான இந்த செய்முறையை பின்பற்றி அற்புதமான நீமஸ்த்ரா இயற்கை பூச்சிக்கொல்லி மருந்தை தயாரியுங்கள். பூச்சிகளை விரட்டுங்கள். இதுபோன்ற ஏராளமான ஐடியாக்களுக்கு உங்கள் தமிழ் கிருஷி ஜாக்ரனுடன் இணைந்திருங்கள். தொடர்ந்து படியுங்கள்!
மேலும் படிக்க...
பயிருக்கு உயிரூட்டும் தயிர்- பொன்னியமாக மாற்றி யூரியாவிற்கு பதிலாக பயன்படுத்தலாம்!
குறைந்த செலவில் அதிக மகசூல் பெற மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல்!!