மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 8 June, 2022 3:21 PM IST

நீங்கள் ஒரு சிறிய அல்லது பெரிய கோழிப்பண்ணையை தொடங்க நினைக்கிறீர்களா? முதலீடு குறித்து யோசிக்கிறீர்களா? வங்கிகளில் இருந்து கடனுதவி தேவைப்படுகிறதா? அப்படிஎன்றால் இந்த தகவல்கள் உங்களுக்குத்தான்.

கால்நடை வளர்ப்பு என்பது விவசாயத்தின் ஒரு பெரும் கிளையாகும். ஏராளமான விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக கால்நடை வளர்ப்பை நம்பியிருக்கிறார்கள். ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவைகளை மேய்ச்சல் தொழிலுக்கு மட்டுமின்றி இறைச்சிக்காகவும் என ஒரு தனி பெரும்பிரிவே இப்போது உருவாகிவிட்டது. விவசாயிகளும், தொழில் முனைவோரும் இறைச்சிக்காகவே கோழிப்பண்ணை, பன்றி பண்ணை, ஆட்டு மந்தை என அமைத்து வணிக ரீதியாகவும் லாபம் ஈட்டி வருகின்றனர். இது போன்ற விவசாயம் சார்ந்த தொழில்களை ஊக்குவிக்க மத்திய மாநில அரசுகள் மானியமும், வங்கி கடனுதவிகளையும் வழங்கி வருகின்றன. நாட்டில் கோழி வளர்ப்புக்கு கடனுதவிகளை வழங்கும் சிறந்த வங்கிகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

கோழிப்பண்ணைக்கு கடன் வழங்கும் வங்கிகள்!

SBI கோழிக்கடன் (SBI Poultry Loan)

எஸ்பிஐ வங்கி (State Bank of Inida), கோழி கொட்டகை, தீவன அறை மற்றும் பிற தேவைகளுக்காகவும் சிறப்பான முறையில் SBI Poultry Loan என்ற பெயரில் விவசாயிகளுக்கும், தொழில் முனைவோருக்கும் கடனுதவிகளை செய்து வருகிறது.

தகுதி - கோழி வளர்ப்பில் போதுமான அனுபவம் அல்லது அறிவு மற்றும் கோழி கொட்டகைகளை அமைப்பதற்கான நிலம் உள்ள விவசாயிகள் இந்த கடனுக்கு தகுதியானவர்கள்

இணை பாதுகாப்பு - பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு, விவசாயிகள் கோழி கொட்டகை மற்றும் பிற உள்கட்டமைப்புகள் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலத்திற்கு ஈடான நிலம், வீடு போன்ற சொத்துகளை அடமானம் வைக்க வேண்டும், அவை முன்கூட்டியே 50 சதவீதத்தை ஈடுசெய்திருக்க வேண்டும்.

திருப்பிச் செலுத்தும் காலம் - இரு மாத தவணைகளில் ஆறு மாத கால அவகாசம் உட்பட ஐந்து ஆண்டுகள்.
தேவையான ஆவணங்கள் - வாக்காளர் அடையாள அட்டை / பான் கார்டு / பாஸ்போர்ட் / ஆதார் அட்டை, / ஓட்டுநர் உரிமம். முகவரி சான்றுகளுக்கு அவர்கள் வாக்காளர் அடையாள அட்டை / பாஸ்போர்ட் / ஆதார் அட்டை / ஓட்டுநர் உரிமம் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி? (How to apply for SBI loans)

விண்ணப்ப படிவத்திற்காக உங்கள் அருகிலுள்ள எஸ்பிஐ கிளையைத் தொடர்பு கொள்ளுங்கள். அல்லது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தையும் நாடலாம் - https://sbi.co.in

SBI பிராய்லர் பிளஸ் கடன் (SBI Broiler Plus Loan)

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஒப்பந்த விவசாயத்தின் கீழ் பிராய்லர் விவசாயிகளுக்கு பிரத்தியேக கடன்களை வழங்குகிறது. இந்த திட்டம் விவசாயிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பிராய்லர் கோழிப் பண்ணை அமைக்கவும், கட்டுமான செலவுகள், தீவன அறை மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்கும் கடன்களை வழங்குகிறது.

தகுதி - கோழி வளர்ப்பில் போதுமான அனுபவம் அல்லது பயிற்சி பெற்றவர்கள் மற்றும் கோழி கொட்டகைகளை நிர்மாணிப்பதற்கான நிலம் உள்ளவர்கள் இந்த கடனுக்கு தகுதியானவர்கள். நிலம் மற்ற கோழி பண்ணைகளிலிருந்து குறைந்தது 500 மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும் மற்றும் குடிநீர் ஆதாரத்தைக் கொண்டிருக்க வேண்டும்.

பண்ணையின் அளவு - கோழிப்பண்ணையில் குறைந்த பட்சம் 5000 கோழிவகளாவது இருக்க வேண்டும் அதிக்கட்சமாக 10,000 முதல் 15,000 கோழிகள் வரை இருக்கலாம்.

கடன் தொகை - செலவில் 75 சதவீதம் வரை வங்கிக் கடனுதவி வழங்கப்படும். ஒவ்வொரு 5000 கோழி வளர்ப்புக்கும், கடன் தொகை ரூ .3 லட்சம் வரை கிடைக்கும். அதிகபட்ச கடன் தொகை ரூ .9 லட்சம்
பாதுகாப்பு - வங்கிக்கு உத்தரவாதம் அளிப்பதற்காக, கோழி கொட்டகை மற்றும் பிற உள்கட்டமைப்புகள் கட்ட திட்டமிடப்பட்டிருக்கும் நிலத்திற்கு இணையான சொத்தை அடமானம் வைக்க வேண்டும். அது முன்கூட்டியே குறைந்தது 50 சதவீதத்தை ஈடுகட்ட வேண்டும்.

திருப்பிச் செலுத்துதல் - கடன் தொகையை ஐந்து ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும், மேலும் ஆறு மாத கால அவகாசம் வழங்கப்படும்.

எஸ்பிஐ கோழி கடன்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

எஸ்பிஐ கடனுக்கு விண்ணப்பிக்க, உங்கள் அருகிலுள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளையை தொடர்பு கொள்ளவும். அல்லது, அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://sbi.co.in/ ஐ பார்க்கவும்.

Credit : Pinterest

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கோழி வளர்ப்பு கடன்

பி.என்.பி வங்கி (PNB - Punjab National Bank) கோழிப் பண்ணைக்கான கொட்டகைகளை நிர்மாணிப்பதற்கும், உபகரணங்கள் வாங்குவதற்கும் கடன்களை வழங்குகிறது. கோழிக் குஞ்சுகளை பராமரிக்கவும், தீவனம், மருந்துகள் போன்றவற்றை வாங்குவதற்கான உற்பத்தி கடன்களையும் வங்கி வழங்குகிறது.

தகுதி - கோழி வளர்ப்பில் போதுமான அனுபவம் அல்லது பயிற்சி பெற்றவர்கள் மற்றும் கோழி கொட்டகைகளை நிர்மாணிப்பதற்கான நிலம் உள்ளவர்கள் இந்த கடனுக்கு தகுதியானவர்கள். நிலம். சிறு விவசாயிகள், நிலமற்ற விவசாயத் தொழிலாளிகளும் கடன்களுக்கு தகுதியுடையவர்கள்.

இணை பாதுகாப்பு - வங்கி உத்தரவாதத்திற்காக கடனுக்கு ஈடதான சொத்தை (நிலத்தை) அடமானம் வைக்க வேண்டும். அல்லது மூன்றாம் தரப்பு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.

கடன் தொகை - கடன் தொகை கோழிப்பண்ணையின் வகை மற்றும் அளவைப் பொறுத்து வழங்கப்படும்.
திருப்பிச் செலுத்தும் காலம் - வணிக ரீதியிலான அடிப்படையில் 12-18 மாதங்கள். சிறு விவசாயிகளின் திறனைப் பொறுத்து முதலீட்டுக் கடனை திருப்பிச் செலுத்த 6 முதல் 7 ஆண்டுகள் வரை இருக்கும்.
தேவையான ஆவணங்கள் - அடையாளச் சான்று (வாக்காளர் அடையாள அட்டை / பான் அட்டை / பாஸ்போர்ட் / ஆதார் அட்டை, / ஓட்டுநர் உரிமம்) மற்றும் செல்லுபடியாகும் முகவரி ஆதாரத்துடன் விண்ணப்ப படிவத்தை முறையாக பூர்த்தி செய்யுங்கள்.

பி.என்.பி கடன்களுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது

அருகிலுள்ள பி.என்.பி கிளையைத் தொடர்புகொண்டு கடன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும். அல்லது https://www.pnbindia.in/ ஐ பர்க்கலாம்.

எச்.டி.எஃப்.சி வங்கியில் கோழிக் கடன் (HDFC Bank loan)

எச்.டி.எஃப்.சி வங்கி (HDFC Bank) கோழி, கால்நடை வளர்ப்பு, பால் பண்ணை, விதை வங்கி, தானியக் கிடங்கு போன்றவற்றை அமைப்பதற்கு அனுபவமுள்ள விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குகிறது.

தகுதி - அனைத்து விவசாயிகளும், முறையான பயிற்சி சான்றிதழ் (Training Certificate) அல்லது கோழி பண்ணை நிர்வாகத்தில் அனுபவம் உள்ள விவசாயத் தொழிலாளர்கள் கோழிப்பண்ணை அமைக்க வங்கிக் கடன் பெறலாம்.

இணை பாதுகாப்பு - பாதுகாப்பு காரணங்களுக்காக, கடன் பெரும் நபர் கடன் தொகைக்கு ஈடான நிலத்தை அடமானம் வைக்க வேண்டும். அல்லது, மூன்றாம் தரப்பு உத்தரவாதம் (Surity) அளிக்கப்பட வேண்டும்.

கடன் தொகை - கடன் தொகையானது கோழிப்பண்ணை வகை மற்றும் அளவைப் பொறுத்தது.
திருப்பிச் செலுத்தும் காலம் - 5 ஆண்டுகள் வரை.

தேவையான ஆவணங்கள் - அடையாளச் சான்று (வாக்காளர் அடையாள அட்டை / பான் அட்டை / பாஸ்போர்ட் / ஆதார் அட்டை, / ஓட்டுநர் உரிமம்) மற்றும் செல்லுபடியாகும் முகவரி ஆதாரத்துடன் விண்ணப்ப படிவத்தை முறையாக பூர்த்தி செய்யுங்கள்.

எச்.டி.எஃப்.சி கடன்களை எவ்வாறு பயன்படுத்துவது

விண்ணப்பிக்க அருகிலுள்ள HDFC வங்கிக் கிளையைத் தொடர்பு கொள்ளவும். அல்லது அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.hdfc.com ஐப் பார்வையிடவும்

ஐடிபிஐ கோழி கடன் (IDBI Poultry Loan)

IDBI வங்கி, கோழி கொட்டகை, தீவன அறை மற்றும் பிற உபகரணங்களை அமைப்பதற்கு தற்போதுள்ள மற்றும் புதிய விவசாயிகளுக்கு போதுனா கடன் சலுகைகளை வழங்கி வருகிறது.

தகுதி - பயிற்சி சான்றிதழ் அல்லது அனுபவ சான்றிதழ் போன்றவற்றால் அங்கீகரிக்கப்பட்ட கோழி வளர்ப்பு பற்றிய முழுமையான அறிவு / புரிதல் உள்ள விவசாயிகள் கோழி கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

திருப்பிச் செலுத்தும் காலம் - ஆறு ஆண்டுகள்.

தேவையான ஆவணங்கள் - அடையாளச் சான்று ; வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) / பாஸ்போர்ட் / ஆதார் அட்டை (Aadhar Card) / ஓட்டுநர் உரிமம் (Driving License) போன்ற முகவரி சான்றுகளுடனும் விண்ணப்ப படிவத்தை முறையாக பூர்த்தி செய்யுங்கள்.

ஐடிபிஐ கோழி கடனை எவ்வாறு விண்ணப்பிப்பது?

கோழி கடனுக்கு விண்ணப்பிக்க, அருகிலுள்ள ஐடிபிஐ கிளையை (IDBI Branch) தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யுங்கள். மேலும் https://www.idbibank.in ஐ இணையதளத்தில் தேவும்.

ஃபெடரல் வங்கியில் கோழிக் கடன் (Federal Bank Loan)

ஃபெடரல் வங்கியும் வேளாண் கூட்டுறவு கடன்களை வழங்குகிறது, அதாவது கால்நடை பராமரிப்பு கடன், பால் பண்ணைக் கடன்கள் மற்றும் கோழிப்பண்ணை கடன்கள். விவசாயிகள் சொத்து மதிப்பு அல்லது திட்ட செலவில் 100 சதவீதம் வரை கடன் தொகையைப் பெறலாம்.

தகுதி - பயிற்சி சான்றிதழ் அல்லது அனுபவ சான்றிதழ் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட கோழி வளர்ப்பு குறித்த சரியான அறிவுள்ள விண்ணப்பதாரர்கள் (Applicants) ஃபெடரல் வங்கி கடனுக்கு தகுதியுடையவர்கள்.

கடன் தொகை - ரூ .50,000 வரையிலான கடனுக்காக உங்கள் சொத்து / திட்ட செலவில் 100% பெறலாம். ரூ .50,000 க்கு மேல் உங்கள் சொத்து / திட்டத்தின் செலவில் 85% வரை கடன் தொகை பெறலாம்

திருப்பிச் செலுத்தும் காலம் - ஒன்பது ஆண்டுகள் வரைக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.

கோழி கடனை எவ்வாறு விண்ணப்பிப்பது?

கோழி கடனுக்கு விண்ணப்பிக்க, அருகிலுள்ள ஃபெடரல் வங்கி (Federal Bank) கிளையை தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யுங்கள். மேலும் https://www.federalbank.co.in ஐப் பார்க்கவும்.

மேலும் படிக்க...

புறக்கடையில் தரம் உயர்த்தப்பட்ட நாட்டுக் கோழி வளர்ப்பு முறைகள்!!

வளமான வருமானத்திற்கு வான்கோழி வளர்ப்பு!!

English Summary: All you want to know about Top Banks Offering Best Loans for Poultry Farming full details inside
Published on: 02 October 2020, 05:13 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now