பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 19 December, 2020 12:36 PM IST
Credit : Lopol,org

நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) பல்வேறு வகையான வேளாண்துறை சார்ந்த கடன் திட்டங்களை வழங்குகிறது. நாட்டில் 15000 கிளைகளைக் கொண்ட இந்த வங்கி, விவசாயம் மற்றும் விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் திறம்பட செயல்படுகிறது.

எஸ்பிஐ வேளாண் கடன் வகைகள் (SBI Agriculture Loan)

பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் பல்வேறு வகையான விவசாய கடன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

எஸ்பிஐ பயிர் கடன் (SBI Crop Loan)

பயிர் கடன் அடிப்படையில் பயிர் உற்பத்தி, அறுவடைக்கு பிந்திய நடவடிக்கைகள், எதிர்பாராத நிகழ்வுகள் போன்ற செலவுகளை உள்ளடக்கியது. கடன் வாங்குபவர்களுக்கு கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படுகிறது - இது ஒரு வகை ATM ரூபே கார்டு, இது ஏடிஎம்களில் இருந்து பணத்தை மிக எளிதாக எடுக்க பயன்படுகிறது. இந்த அட்டைகளை பண்ணைக்கு உரங்கள் மற்றும் இதர வேளாண் சார்ந்த பொருட்களை வாங்க பயன்படுத்தலாம்.

கிசான் கிரெடிட் கார்டு (Kisan Credit Card) திட்டத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள்

  • கிசான் கிரெடிட் கார்டுகளின் வங்கி கணக்கில் கடன் இருப்பு தொகைக்கு ஏற்ப சேமிப்பு வங்கிக் கணக்கு விகிதத்தில் வட்டி வழங்கப்படுகிறது.

  • ரூ .3 லட்சம் வரையான கடன் தொகைக்கு, 2 சதவீத வட்டி விலக்கு தரப்பட்டது.

  • கடன் வாங்குபவர் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தினால், அவருக்கு கூடுதலதாக 3 சதவீதம் வட்டி விலக்கு வழங்கப்படுகிறது.

மேலும் தகவல்களுக்கு sbi.co.in இணையதளத்தை பார்வையிடவும். (https://sbi.co.in/web/agri-rural/agriculture-banking/crop-loan)

எஸ்பிஐ தங்க கடன் (SBI Gold Loan)

விவசாயிகள் தங்க ஆபரணங்களை அடகு வைத்து விவசாய தேவைகளுக்காக கடன் பெறலாம். இந்த கடன் திட்டங்கள் நல்ல வட்டி விகிதங்களைக் கொண்டுள்ளன. மேலும் உடனடியாக வழங்கப்படுகின்றன. கூடுதலாக, அனைத்து விவசாய தேவைகளையும் இந்த கடன்கள் மூலம் ஈடுகட்ட முடியும். விவசாயிகளுக்கு இரண்டு வகையான தங்கக் கடன்கள் கிடைக்கின்றன - பயிர் உற்பத்திக்கான வேளாண் தங்கக் கடன் மற்றும் பல்நோக்கு தங்கக் கடன் திட்டம். 

ஒரு கிலோ மீட்டருக்கு 30 பைசா தான்! மானிய விலையில் எலக்ட்ரிக் ரிக்ஸா!

பயிர் உற்பத்திக்கான வேளாண் தங்கக் கடன் திட்டம் (Agri Gold Loan for Crop Production) : அம்சங்கள் & நன்மைகள்

  • தங்க ஆபரணங்களை அடகு வைப்பதன் மூலம் பெறலாம்

  • எளிதான மற்றும் வசதியான கடன் செயல்முறை

  • அனைத்து எஸ்பிஐ வங்கி கிளைகளிலும் கடன் வழங்கப்படுகிறது.

பல்நோக்கு தங்கக் கடன் (Multi Purpose Gold Loan) : அம்சங்கள் & நன்மைகள்

  • எளிதான மற்றும் வசதியான கடன் செயல்முறை.

  • மறைக்கப்பட்ட கட்டணங்கள் ஏதும் இல்லை.

  • திருப்பிச் செலுத்தும் கால அட்டவணைகளும் விருப்பத்திற்கேற்றவை.

  • அனைத்து நகர்ப்புற & கிராமப்புற வங்கி கிளைகளிலும் இந்த கடன்கள் கிடைக்கின்றன.

எஸ்பிஐ பண்ணை இயந்திரமயமாக்கல் கடன் (SBI Farm Mechanization Loan)

இந்த கடன் திட்டத்தில், விவசாய உபகரணங்கள் மற்றும் டிராக்டர்கள், பவர் டில்லர்ஸ், அறுவடை செய்பவர்களுக்கான இயந்திரங்கள் போன்ற இயந்திரங்களை வாங்குவதற்காக வழங்கப்படுகின்றன. விவசாயிகள் இந்த கடனை எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் பெற முடியும். இதில், பல்வேறு வகையான பண்ணை இயந்திரமயமாக்கல் கடன்கள் அடங்கும்;

டிராக்டர் கடன் (Tractor Loan)

இதில் 4 வகையான கடன் திட்டங்கள் அடங்கும்

  • எஸ்.எஸ்.டி.எல் (அடமானம் இலவசம்)

  • எஸ்.எஸ்.டி.எல் உடனான உத்தரவாதம்

  • புதிய டிராக்டர் கடன் திட்டம்

  • தட்கல் டிராக்டர் கடன்

ஒருங்கிணைந்த அறுவடை கடன் திட்டம் (Combine Harvester Loan)

ஒருங்கிணைந்த அறுவடை இயந்திரங்கள் மற்றும் அதன் உதிரி பாகங்கள் வாங்க கடன் வழங்கப்படுகிறது. கடனை அரை ஆண்டுக்குள் தவணைகளில் திருப்பிச் செலுத்த வேண்டும். ஒருங்கிணைந்த முறையில் அறுவடை செய்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். அவர்களிடம் 8 ஏக்கர் பாசன நிலம் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

45 நிமிடத்தில் கடன் வழங்கும் SBI! - உங்களை தேடி வரும் சூப்பர் திட்டம்!

சொட்டு நீர்ப்பாசன கடன்கள் (Drip Irrigation Loans)

இந்த கடன் திட்டத்தின் அடிப்படையில், சொட்டு நீர் பாசன முறையை நிர்வகிக்க வழங்கப்படுகிறது. நிலம் உள்ள மற்றும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைத்து விவசாயிகளும் இந்த கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

வேளாண்துறை சார்ந்த கடன் திட்டங்கள்

இந்த வகை கடன் திட்டத்தில் 3 வகையான விவசாய கடன் திட்டங்களைக் கொண்டுள்ளது

பால் கடன் (Dairy Loan)

இந்த கடன் திட்டம் பால் சங்கங்களுக்கு வழங்கப்படுகிறது:

  • பால் பண்ணை / பால் கூட்டுறவுப் பண்ணை கட்டடம் அமைக்க

  • தானியங்கி பால் சேகரிப்பு முறையை அமைக்க

  • போக்குவரத்து வாகனம் வாங்க

  • பெரிய அளவிலான குளிரூட்டும் நிலையம் அமைக்க

  • மாவட்ட பால் கூட்டுறவு சங்கத்துடன் இணைந்த ஒரு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தால் இணைந்து இந்த கடனை எடுக்க முடியும்.

கோழி கடன் (Poultry Loan)

கோழிப் பண்ணை, தீவனங்கள், கோழி கொட்டகை மற்றும் பிற உபகரணங்களை வாங்கி நிர்வகிக்க விவசாயிகளுக்கு இந்த கடன் வழங்கப்படுகிறது.

மீன்வள கடன் (Fisheries Loan)

மீன் வலை, மீன் விதைகள் மற்றும் தொடர்புடைய உபகரணங்களை வாங்க இந்த கடனைப் பெறலாம். அனைத்து மீனவர்களும் மற்றும் கால்நடைதுறை சார்ந்த விவசாயிகளும் இந்த கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

 

எஸ்பிஐ வேளாண் கடன்களுக்கு தேவையான அடிப்படை ஆவணங்கள்

முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம்

  • அடையாள சான்று - வாக்காளர் அட்டை, பான் கார்டு, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது பாஸ்போர்ட்

  • முகவரி சான்று - ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது பாஸ்போர்ட்

எஸ்பிஐ வங்கியில் வேளாண்துறை சார்ந்த கடனுக்கு விண்ணப்பிக்க நேரடியாக இங்கே கிளிக் செய்யவும்

மேலும் படிக்க..

ABVKY : அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா மூலம் வேலை இழந்தவர்கள் சம்பளம் பெறுவது எப்படி?

ஒரு லட்சம் முதலீடு செய்து 2 லட்சம் திரும்பி பெறலாம்!! 100% லாபம் தரும் கிசான் விகாஸ் பத்திர திட்டம் - மூலம் விபரம் உள்ளே!!

English Summary: All you want to know about what kind of agricultre loans offereing By Sbi Bank
Published on: 18 December 2020, 05:41 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now