விவசாயத்துக்கான நிலப்பரப்பு நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், விவசாய உற்பத்தியில் தன்னிறைவு அடைய ஒரு புதிய அணுகு முறை தேவைப்படுகிறது. அதுதான் ஒருங்கிணைந்த பண்ணையம்.
ஒருங்கிணைந்த பண்ணை
ஒருங்கிணைந்த பண்ணை முறையில் பண்ணைத் திட்டம் வகுக்கும்போது நிலங்களுக்கு ஏற்ற பயிர்த் திட்டத்தை அமைத்தல் வேண்டும். பின்பு அந்தப் பயிர்த் திட்டத்துக்கு ஏற்ப பொருளாதார ரீதியில் பலன் தரக்கூடிய ஒன்று அல்லது இரண்டு உபதொழில்களை தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்ந்து எடுக்கும் உபதொழில்கள் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்க வேண்டும்.
அவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்ட உப தொழில்களுக்குத் தேவையான இடுபொருள்கள் அந்தப் பண்ணையிலேயே உற்பத்தி செய்ய வேண்டும். ஒருங்கிணைந்த பண்ணையம் என்பது ஒரு விவசாயி அவர் சார்ந்த பல தொழில் செய்யக வேண்டும் என்பதைவிட, அவர் ஒன்றுக்கும் மேற்பட்டோரை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே பொருள்.
தினசரி வருமானம் (Daily Income)
தினம் வருமானம் என்ற முறையில் சில கறவை மாடுகள் வைத்து பால், மோர், வெண்ணை என வியாபாரம் செய்யலாம், மீன் வளர்ப்பில் ஈடுபட்டு தினம் வருமானம் தேடலாம். காய்கறிகள், கீரைகள் சுழற்சி முறையில் பயிரிட்டு தின வருமானத்தை அதிக படுத்தி கொள்ளலாம்.
வார வருமானம் (Weekly Income)
கோழி, காடை, வாத்து, வான்கோழி, போன்றவற்றை வளர்த்து வருமானம் ஈட்டலாம், சுழற்சி முறையில் வாழை பயிர் செய்து வந்தால் வாரம் ஒருமுறை வருமானம் கிடைக்கும்.
மாத வருமானம் (Monthly Income)
சிறுதானியங்கள் பயிறு வகைகள் போன்றவற்றை பயிர் செய்து மூன்று மாதங்கள் ஒரு முறை வருமானம் ஈட்ட முடியும்.
வருட வருமானம் (Yearly Income)
நீண்ட கால பயிர்களான மரங்களை வளர்து 5 வருடங்கள் ஒரு முறை நல்ல வருமானம் ஈட்டலாம்.
ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பதில் திட்டமிடுதல் மிகவும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
-
நிலத்தின் அளவு
-
நிலத்தின் தற்போதைய அடிப்படை வசதிகளான நீர், மின்சாரம்,சாலை வசதி,தடுப்பு வேலி,பாது காப்பு,மண்.
-
பண்ணையில் ஈடுபடும் குடும்ப உறுப்பினர்களின் பங்களிப்பு, பணியாளர்களின் எண்ணிக்கை
-
திட்டமிடப்படும் அல்லது எதிர்பார்க்கப்படும் வருமானம் என்பது நபருக்கு நபர் வேறுபடும்.
-
மிக முக்கியமானது முதலீடு
மேற்கண்ட காரணங்களைக் கருத்தில் கொண்டு செயல்பட்டால் நிச்சயமாக வெற்றி பெறலாம். ஒவ்வொரு விவசாயிக்கும் விவசாயம் சார்ந்த ஏதோ ஒரு தொழில் இருக்கவேண்டும். உதாரணமாக தேங்காயில் இருந்து கொப்பரை எடுப்பது,பாலில் இருந்து வெண்ணை மற்றும் மோர் எடுப்பது போன்ற ஒரு சிறு தொழில் அமைத்துக்கொண்டு செயல்பட வேண்டும்.இப்படி சிறு தொழில் அனைத்தும் விவசாயிகள் கையில் இருந்தால் வேளாண்மையிலும் சாத்தியம் வெற்றி.
தகவல்
அக்ரி சு சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர்
9443570289
அருப்புக்கோட்டை
மேலும் படிக்க...
புரெவி புயல் வலுவிழந்தது- தமிழகத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை!
ஒரு ஏக்கரில் ரூ.3 லட்சம் வருமானம் -பளிச் லாபம் தரும் பட்டு வளர்ப்புத்தொழில்!
TNAUவில் டிச.5ம் தேதி காளான் வளர்ப்பு பயிற்சி!