Farm Info

Saturday, 24 July 2021 10:30 PM , by: Elavarse Sivakumar

கரும்புக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க, கூடுதல் மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட வேளாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது.

தித்திக்கும் கரும்பு (Thorny cane)

கரும்பு என்றவுடன் நம் நினைவுக்கு வருவது அதன் சுவைதான். பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி மாதம்தான் இந்தக் கருப்புநிறக் கரும்பின் சுவையை நாம் ருசிக்க முடியும். இந்த முறை தவறவிட்டால், அடுத்த 24 மாதங்கள் காத்திருந்தே ஆக வேண்டும்.

இருப்பினும் பச்சை நிறக் கரும்புகள் வருடம்முழுவதும் விற்கனை செய்யப்பட்டாலும், அதனை வாயால் கடித்து சாப்பிடுவது என்பது சாத்தியமில்லை. இதன் காரணமாக கரும்பு நிறக் கரும்பு அனைவராலும் விரும்பப்படுகிறது.

இதுதொடர்பாக, கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் இரா.சித்ராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

கரும்புக்கு (For Sugarcane)

கோவையில் 350 ஹெக்டர் பரப்பில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. எனவே கரும்பு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பயிருக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் கூடுதல் மானியம் வழங்கப்பட உள்ளது.

100% மானியம் (100% subsidy)

சொட்டுநீர் பாசனத்துக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியம் வழங்கப்பட உள்ளது.

கூடுதல் மானியம் (Additional grant)

கரும்பு, பயிரிடும் சிறு, குறு விவசாயிகளுக்கு திறந்தவெளி கிணறு மூலம் மேற்பரப்பு சொட்டுநீர் பாசனக் கருவி அமைப்பதற்கு, வழக்கமான பயிர் மானியம் ஒரு ஹெக்டேருக்கு ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 133 வழங்கப்படுகிறது.

கூடுதல் மானியமாக ரூ.38 ஆயிரமும், தரையின் கீழ் அமைக்கும் போது ரூ.49 ஆயிரமும் வழங்கப்படுகிறது.

ரூ.1.13 லட்சம் (Rs.1.13 lakhs)

கரும்பு பயிரிடும் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆழ்குழாய் கிணற்றின் மூலம் மேற்பரப்பு சொட்டுநீர் பாசனக் கருவி அமைப்பதற்கு, வழக்கமான பயிர் மானியம், ஒரு ஹெக்டேருக்கு ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 133 வழங்கப்படுகிறது.

கூடுதல் மானியமாக ரூ.24 ஆயிரமும், தரையின் கீழ் அமைக்கும்போது, ரூ.36 ஆயிரமும் வழங்கப்படுகிறது.

தேவைப்படும் ஆவணங்கள் (Documents required)

  • சிட்டா

  • அடங்கல்

  • குடும்ப அட்டை நகல்

  • நில வரைபடம்

  • மூன்று புகைப்படங்கள்

முன்பதிவு அவசியம் (Booking is required)

சொட்டு நீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் மேலே கூறிய ஆவணங்களுடன் வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை அணுகி பெயரை பதிவு செய்து கொள்ளலாம்
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

ஜாதிக்காய், கிராம்பு, மிளகு பயிரிட ரூ.20,000 மானியம்!

கரும்புக்குச் சொட்டு நீர்ப் பாசனம் -ரூ.ஒரு லட்சத்திற்கு மேல் மானியம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)