மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 9 October, 2019 4:47 PM IST

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தோட்டங்களில் உள்ள காய்கறிகள், பழங்கள், இலைகள் போன்றவற்றை பூச்சிகள் முதலியன தாக்கும் என்பதால் அவற்றிலிருந்து பயிர்களை பாதுகாப்பதற்கான யுக்திகளை தோட்டக்கலைத் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

இம்மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது. பொதுவாக வெயில் காலங்களில் பூச்சிகளின் தாக்குதல் குறைவாகவே இருக்கும். ஆனால் மழை காலங்களில் வெப்பநிலை குறைவதும், காற்றில் ஈரப்பதம் அதிகமாவதும் இயற்கையே. இதன் காரணமாக பூச்சி மற்றும் நோய்களின் தாக்கம் பயிா்களில் அதிகமாகவே காணப்படும். தோட்டங்களை களைகள் இன்றியும், காய்ந்த இலை தளைகள் இன்றியும் பராமரிப்பதன் மூலம் பூச்சி, நோய்களின் பெருக்கத்தை குறைக்கலாம்.

பருவமழை அதிகமானால்  வெள்ளம் மற்றும் புயல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். இதன் காரணமாக பயிர்கள் சேதமடைவதுடன் பூச்சிகளின் தாக்குத்தல் பயிர்களில் அதிக அளவில் தென்படும். தோட்டங்களை களைகள் நிக்கி முறையாக பராமரிப்பதன் மூலம்  பூச்சி மற்றும் நோய்களின் பெருக்கத்தை குறைக்கலாம். பூச்சிகளை இனக்கவர்ச்சி பொறி மூலம்  ஆண் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். அதேபோல்  இரவு நேரங்களில், பண்டைய முறையில் ஒரு விளக்கு பொறிகளை வைத்து பெண் பூச்சிகளை கவர்ந்து அழிப்பதன் மூலம் முட்டையிட்டு பெருகுவதை பெருமளவில் தடுக்கலாம்.

பராமரிப்பு முறைகள்

  • மழை தொடங்குவதற்கு இரண்டு நாட்கள் முன்பு தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்தி விட விடும். அப்போது தான் மரதின் வேர்ப்பகுதி இறுகி காற்றில் சாயாமல் தடுக்கலாம். அத்துடன் களைகள், காய்ந்த இலைகள் போன்ற வற்றை அகற்றி முறையான வடிகால் அமைத்து வைத்திருக்க வேண்டும்.
  • தக்காளி, கத்தரி, மிளகாய் மற்றும் கொடிவகை காய்களை முறையாக மண் அணைப்பதன் மூலம் பாதுகாப்பதினால் வேர்களில் நீர் தேங்குவதை தடுத்து வேர்ப்பகுதி அழுகுவதை கனிசமாக தவிர்க்கலாம்.
  • மழைக்காலங்களில்  திறந்தவெளியில் காய்கறிப் பயிர்களை நடவு செய்து நாற்றாங்கால் அமைப்பதை தவிர்த்து,  குழித்தட்டுகளிலோ அல்லது பசுமை குடில்களில் நாற்றுகளை அமைத்து உற்பத்தி செய்யலாம்.
  • காற்றினால் வாழை மரம் பாதிப்பு இல்லாமல் இருக்க கீழ்மட்ட இலைகளை அகற்றிவிட்டு மரத்தின் அடியில் மண்ணினால் அணைத்தல் செய்ய வேண்டும்.
  • காற்று மரங்களின் இடையே எளிதாக நுழைந்து செல்லும் வகையில் பக்கக் கிளைகளையும் அதிகப்படியான இலைகளை கவாத்து செய்யலாம்.
  • மலைத்தோட்டப் பயிர்களான காபி, மிளகு, டீ, ஆரஞ்சு போன்றவற்றில் ஏற்படக்கூடிய நோய்களைத் தடுக்க ஓரங்களில் உள்ள நிழல் தரும் மரங்களின் தேவையற்ற கிளைகளை அகற்றி பயிர்களை பாதுகாக்கலாம்.
  • மலைத்தோட்டப் பயிர்களான காபி, மிளகு, டீ, ஆரஞ்சு போன்றவற்றில் ஏற்படக்கூடிய நோய்களைத் தடுக்க ஓரங்களில் உள்ள நிழல் தரும் மரங்களின் தேவையற்ற கிளைகளை அகற்றி பயிர்களை பாதுகாக்கலாம்.
  • நாம் வசிக்குமிடத்தை சுற்றியுள்ள மரங்களின் கிளைகளை  வெட்டி விட வேண்டும். அதேபோன்று நோய்வாய்ப்பட்ட செடிகளையும்,  களைகளையும் முற்றிலுமாக  அகற்ற வேண்டும்.
  • பெரிய மரங்கள் உள்ளது எனில் அதை சுற்றி மண் அணை அமைக்க வேண்டும். சிறிய கன்றுகள் மற்றும் ஒட்டுச் செடிகளை முட்டுக் கொடுத்து வைப்பதன் மூலம் மரங்களை நிலை நிறுத்திக் கொள்ளலாம்.
  • பசுமைக்குடில்  மற்றும் நிழல்வலைக் கூடங்களின்  அருகிலுள்ள பெரிய மரங்களில் கிளைகளை அகற்றிவிடவேண்டும். மேலும் காற்றின் வேகத்தை குறைக்கக்கூடிய  சவுக்கு மரங்களை உயிர்வேலியாக அமைப்பதன் மூலம் காற்றின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கலாம்.

இவ்வாறு செய்வதன் மூலம் மழை மற்றும் பூச்சிகளின் தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்ககலாம்.

Anitha Jegadeesan
Krishi Jagran 

English Summary: Are you looking for guidance, how to take care of plants during monsoon?
Published on: 09 October 2019, 04:47 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now