அரியலூர் மாவட்டத்தில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சம்மந்தமான பொது மக்கள் குறைதீர் கூட்டம், நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.
மேற்கண்ட கூட்டத்தினை, சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னின்று நடத்துவார்கள். அக்கூட்டத்தில், கூட்டுறவுத் துறையைச் சார்ந்த அலுவலர்கள் கலந்துகொள்வார்கள். மேலும், அக்கூட்டம் நடத்தப்படுவதை மேற்பார்வை செய்திட அரியலூர் வட்டம், இராயம்புரம் கிராமத்திற்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அரியலூர், உடையார்பாளையம் வட்டம், வாழைக்குறிச்சி கிராமத்திற்கு மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் அரியலூர், செந்துறை வட்டம், பரணம் கிராமத்திற்கு துணை பதிவாளர் (பொ.வி.தி) அரியலூர், ஆண்டிமடம் வட்டம், ஆண்டிமடம் கிராமத்திற்கு தனித்துணை ஆட்சியர், சமூக பாதுகாப்புத் திட்டம் அரியலூர், ஆகியோர் மேற்பார்வை அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
எனவே, அக்கூட்டத்தில், பொதுமக்கள் நியாய விலைக்கடைகள் தொடர்பான குறைகளைத் தெரிவிக்கும், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தால், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு, நகல் மின்னணு குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் அகியோர்களுக்கு அங்கீகாரச் சான்று வழங்குதல், குடும்பத் தலைவர் இறந்திருந்தால் விண்ணப்பம் செய்தல் மற்றும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை அளித்து நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019இன் படி பயன்பெறலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.ரமண சரஸ்வதி அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் அரியலூர் மாவட்டம் தகவல்கள்
விழுப்புரம், லால்குடி, திருச்சி கோட்டை, திருவெறும்பூர், விருத்தாசலம், அரியலூர் ஆகிய நகரங்களுடன் பாபநாசம் ரயில் நிலையத்தில் 2 பேக் பிளாட்பாரம் அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ஆதார் அட்டை பயன்படுத்தி Transaction செய்யலாம், இனி OTP தேவையில்லை
முன்பு நடைப்பெற்ற குறைத்தீர்க்கும் முகாம்!
அரியலூர் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி அவர்கள் தலைமையில் பிப்ரவரி 9, 2023 அன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், 52 முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் கலந்து கொண்டு, 07 கோரிக்கை மணுக்களை அளித்தனர். இக்கூட்டத்தில் 08 முன்னாள் படைவீரர்கள் மற்றும் சாரந்தோர்களுக்கு ரூ.2.60 இலட்சம் மதிப்பிலான கல்வி கல்வித்தொகைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். மேலும், 1971 பங்களதேஷ் போரில் கலந்து கொண்ட முன்னாள் படைவீரர்களுக்கு தென்பிராந்திய தளபதி, சென்னை அவரிகளிடமிருந்து பெறப்பட்டுள்ள பாராட்டுச் சான்றிதழ் 13 நபர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, உதவி இயக்குநர் (முன்னாள் படைவீரர் நலன்) சரவணன், கண்காணிப்பாளர் கலையரசி காந்திமதி மற்றும் அரசு அலுவலர்கள், முன்னாள் படைவீரர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க:
20 சென்டில் 60,000 ரூபாய் வருமானம் தரும் டிராகன் ஃப்ரூட் சாகுபடி
ரூ.10,000 மானியம்: 5ரம் விவசாயிகளுக்கு மின்மோட்டார் பம்புசெட்டு வழங்கல்