அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பெ.ரமண சரஸ்வதி, அவர்கள் தலைமையில் இன்று (28.10.2022) நடைபெற்றது.
அரியலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 954 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டில் இம்மாதம், இது நாள் வரை மெ.டன் பொட்டாஷ் மற்றும் 2170 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை மையங்களில் இருப்பில் உள்ளது.
இதுவரை சான்று பெற்ற நெல் விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் 227 மெ.டன், தனியார் விதை விற்பனை மையங்கள் மூலம் 605 மெ.டன் என கூடுதலாக 832 மெ.டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது வேளாண்மை விரிவாக்க மையங்களில் 8.0 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பில் உள்ளது.
மானிய விலையில் நுண்ணீர் பாசனத் திட்டம் (Subsidized Drip Irrigation Scheme)
தற்போது பருவமழை குறைவாக கிடைத்து வருவதால் நிலத்தடி நீரின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றாற் போல் வேளாண் துறையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. நிலத்தடி நீரை சிக்கனமாக பயன்படுத்தி சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்கோடு வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறைகள் மூலம் சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசன கருவிகளை அமைக்க விவசாயிகளுக்கு அரசு மானியமாக நமது மாவட்டத்திற்கு ரூ.7.92 கோடி நிதி இலக்கு ஒதுக்கீடு செய்து பெறப்பட்டுள்ளது.
சிறு, குறு ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் பாசன கருவிகளை, தங்களது வயல்களில் நிர்மானித்துக்கொள்ள மானியம் அனமதிக்கப்பட்டு வருகிறது. 75 சதவீத மானியத்தில் பயன்பெறும் இதர விவசாயிகள் மீதிப் பங்குத் தொகையை வங்கி வரைவோலையாக விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். சிறு. குறு ஆதிதிராவிட விவசாயிகள் வருவாய்த்துறையில் சான்று பெற்று விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெற்றிட சொந்த நிலத்தில் பயிர் சாகுபடி செய்து வருவதற்கான சிட்டா மற்றும் அடங்கல், வயல் வரைப்படம் மற்றும் மின் இணைப்புடன் நீர் ஆதாரம் உள்ளமைக்கான சான்றுகளுடன் குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்ற இதர ஆவணங்களுடன் சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி விண்ணப்பித்து பயன்பெற மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
சமீபத்தில் இலவச விவசாய மின் இணைப்பு பெற்றுள்ள 1894 விவசாயிகளும் சொட்டு நீர் பாசனம் அல்லது தெளிப்பு நீர் பாசனம் வழங்கும் திட்டத்தில் இணைத்துக்கொண்டு பயன்பெற்றிட தெரிவிக்கப்படுகிறது.
பிரதம மந்திரி விவசாயி கௌரவ நிதியுதவி திட்டம்
விவசாயிகள் பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தின்கீழ் 11-வது தவணை தொகையை பெறுவதற்கு தங்களது ஆதார் விபரங்களை செல்போன் எண் மற்றும் வங்கிகணக்கு எண்ணுடன் இணைப்பது அவசியம் ஆகும். ஆதார் எண்ணுடன், செல்போன் எண்ணை இணைக்காத விவசாயிகள் அருகில் உள்ள இ-சேவை மையங்களை அணுகி, பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்ட வலைத்தளத்தில் தங்களது ஆதார் எண் விபரங்களை உள்ளீடு செய்து, தங்களது விரல் ரேகையை பதிவு செய்து, விபரங்களை சரிபார்த்து கொள்ளலாம். இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் தாங்கள் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு சென்று ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.பெ.ரமண சரஸ்வதி அவர்கள் தெரிவித்தார்.
மேலும், வேளாண் அறிவியல் நிலையம் சோழமாதேவி மூலம் நடப்பு மாதத்திற்கான விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து அனைத்து விவசாயிகளுக்கும் விளக்கி கூறப்பட்டது.
இக்கூட்டத்தில் விவசாயிகள் நேரடியாக கலந்துகொண்டு வேளாண்மை்த்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்பொறியியல் துறை, மின்சாரத்துறை, கால்நடைத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் கூட்டுறவுத்துறை தொடர்பான கோரிக்கைகள் விவசாயிகளால் எழுப்பப்பட்டது. இதில் துறைவாரியாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் விவசாயிகளின் கோர்க்கைகளுக்கு பதில் அளித்தனர். மேலும் விவசாயிகள் அளித்த மனுவிற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க அனைத்து துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுரை வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, வேளாண்மை இணை இயக்குநர் திரு.ஆர்.பழனிசாமி மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க:
SBI Clerk Admit Card 2022 இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்! தேர்வு தேதிகளையும் அறிந்திடுங்கள்!
PMFBY: ராபி பருவம் தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்ய அறிவிப்பு