Farm Info

Sunday, 17 July 2022 07:06 PM , by: Elavarse Sivakumar

மருத்துவராகும் ஆசையை நிறைவேற்றிக்கொள்வதற்காக, மதுரையைச் சேர்ந்த விவசாயி ஒருவர் நீட் தேர்வு எழுதியிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவரைப் பார்த்து தேர்வு எழுதவந்தவர்கள் வியப்பில் உறையும் நிலை உருவானது. 

வெற்றி சாத்தியமே

மனதில் தோன்றும் ஆசை சிலருக்கு எத்தனை முறை முயன்றாலும், அடைய வேண்டும் என்ற வேட்கைகையத் தூண்டும். ஒரு சில முயற்சிகளில், ஆசையை நிறைவேற்றிக் கொள்ள இயலாத நிலையில், உடனே முழுக்கு போட்டுவிட்டுச் செல்வது நம்மில் பலரது வாடிக்கை. ஆனால் வெகு சிலரே, தங்களது ஆசையை நிறைவேற்றிக்கொள்வதற்காகத் தொடர்ந்து முயற்சி செய்வர். இந்த முயற்சிக்கு வெற்றியும் கிடைக்கிறது. அப்படியொரு சம்பவம்தான் இது.

மருத்துவராகும் ஆசை

மதுரை மாடக்குளம், சக்தி நரை சேர்ந்த விவசாயி ராஜ்யக்கொடி. 56 வயதான இவருக்கு மனைவி தேன்மொழி, மகன்கள் சக்திபெருமாள், வாசுதேவா உள்ளனர். சக்தி பெருமாள், காண்ட்ராக்டராக உள்ளார். 2-வது மகன் வாசுதேவா, கடலூர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

பணம் இல்லை

விவசாயி ராஜ்யக் கொடிக்கு மருத்துவராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதற்காக 1986-ம் ஆண்டு நுழைவுத் தேர்வு எழுதினார். இதில் அவருக்கு தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தது. அங்கு கல்விக் கட்டணம் செலுத்த, பணம் இல்லை. எனவே ராஜ்யக்கொடியால் மருத்துவ கல்லூரியில் சேர முடியவில்லை. இருந்தபோதிலும் அவருக்கு மருத்துவராக வேண்டும் என்பது கனவாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் ராஜ்யக்கொடி நடப்பாண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தார். அவருக்கு ஹால் டிக்கெட் வந்து சேர்ந்தது.

தணியாத வேட்கை

அவர், ஹால் டிக்கெட்டுடன் மதுரை அனுப்பானடி ரிங்ரோட்டில் உள்ள வேலம்மாள் நீட் தேர்வு மையத்துக்கு இன்று காலை வந்தார். அவரது ஹால் டிக்கெட்டை சரிபார்த்த அதிகாரிகள், தேர்வு மையத்துக்குள் அனுமதித்தனர். இதனைத் தொடர்ந்து ராஜ்யக்கொடி, நீட்தேர்வு எழுதினார். அவரைப் பார்த்து தேர்வு எழுத வந்திருந்தவர்கள் வியப்பில் உறைந்தனர்.

மேலும் படிக்க...

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!

லெகின்ஸை விரும்பும் இளம்பெண்கள் - பதறவைக்கும் பக்கவிளைவுகள்!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)