செவ்வாய்க்கிழமை ஹைதராபாத்தில் மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் தேசிய சமையல் எண்ணெய்- பாம் ஆயில் மிஷன் வணிக உச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது, வேளாண் துறை அமைச்சர் நரேந்திர தோமர்; பிரதமர் மோடி தலைமையில், விவசாயிகளின் வருவாயை உயர்த்த மத்திய அரசு முழு முயற்சி எடுத்து வருகிறது. விவசாயத் துறையை வலுப்படுத்துவது மோடி அரசின் முக்கிய நோக்கமாகும். அதன் மூலம் உலகில் இந்தியாவின் பலமும் பெரிதும் அதிகரிக்கும் என்றார்.
பாம் ஆயில் மிஷன் மூலம், சமையல் எண்ணெய்களின் இறக்குமதி சார்ந்திருப்பதைக் குறைத்து, சமையல் எண்ணெய்களில் நாட்டை (ATMANIRBHAR) அதாவது தன்னிறைவு அடையச் செய்யும், இதற்கான ஒவ்வொரு அடியிலும் மாநிலங்களுடன் ஒன்றிய அரசு துணை நிற்கும்.
மத்திய அமைச்சர் நரேந்திர தோமர் கூறுகையில், நாட்டில் விவசாயத் துறையில் விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியதிலிருந்து, ஒவ்வொரு தனிமனிதனும், அரசும், அமைப்புகளும் இதில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில், மாநில அரசுகள் தங்களது பங்கை மிகவும் வெற்றிகரமான முறையில் ஆற்றி வருகின்றன.
10 ஆயிரம் FPO-க்கள் தொடக்கம் (Start with 10 thousand FPOs)
உணவு தானியங்களில் உபரி நாடாக உள்ளோம், மற்ற விவசாயப் பொருட்களிலும் இந்தியா முதலிடம் அல்லது இரண்டாவது இடத்தில் உள்ளது, இது நமது விவசாயிகளின் கடின உழைப்பாகும். மேலும் இது அரசுகளின் விவசாய நட்புக் கொள்கைகள் இல்லாமல் சாத்தியமில்லை என்று வேளாண் அமைச்சர் கூறினார். இதைத் தொடர்ந்து, விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்பாடுகளும் குறிப்பிடதக்கது என்றார். நாட்டில் 86 சதவீதம் சிறு விவசாயிகள் உள்ளதால், அவர்களின் பலத்தை அதிகரிக்க, 6,850 கோடி ரூபாய் செலவில், 10 ஆயிரம் எஃப்பிஓக்கள் தொடங்கப்பட்டுள்ளன.
அதே சமயம், விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கவும், அவர்களின் நிதி நிலையை மேம்படுத்தவும், அனைத்து வசதிகளையும் எளிதாக அளிக்கும் வகையில், ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதியில், விவசாய உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படுத்தப்படுகிறது. விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதன் மூலம் விவசாயச் செலவுகளைக் குறைத்து, விவசாய இடுபொருட்களை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக, தன்னிறைவு அடைய வேண்டும் என்பதே அரசின் விருப்பம் என குறிப்பிட்டார், வேளாண் துறை அமைச்சர் நரேந்திர தோமர்.
மற்ற மாநிலங்களில் பாம் ஆயில் அமைக்கும் பணி தீவிரம்(Intensity of work to set up oil palm in other states)
மத்திய அமைச்சர் தோமரின் கூற்றுப்படி, வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் பிற மாநிலங்களில் நிறைய பாம் ஆயில் செய்ய முடியும், ஆகவே இனி, இறக்குமதியை நம்பியிருக்க வேண்டியதில்லை. இத்திட்டத்தின் மூலம் நாட்டில் கூடுதலாக ஆறரை லட்சம் ஹெக்டேர் எண்ணெய் பனை சாகுபடி மேற்கொள்ளப்படும். அதே நேரத்தில், எண்ணெய் பனையின் பரப்பளவு 2025-26 ஆம் ஆண்டில் 10 லட்சம் ஹெக்டேராகவும், 2029-30 ஆம் ஆண்டில் 16.71 லட்சம் ஹெக்டேராகவும் அதிகரிக்கும்.
3.25 லட்சம் ஹெக்டேர் பாம் ஆயில் அமைக்க இலக்கு(The target is to set up 3.25 lakh hectares of oil palm)
கச்சா பாமாயில் உற்பத்தி 2025-26ல், 11.20 லட்சம் டன்னாகவும், 2029-30ல் 28.11 லட்சம் டன்னாகவும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹைதராபாத்தில் நடைபெறும் இரண்டாவது வணிக உச்சிமாநாடு, எண்ணெய் பனை சாகுபடிக்கு குறிப்பிடத்தக்க மற்றும் சாத்தியமுள்ள மற்ற இந்திய மாநிலங்களை உள்ளடக்கும். ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஒடிசா, கோவா, குஜராத் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு, 3.25 லட்சம் ஹெக்டேர் எண்ணெய் பனை தோட்டம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: