விவசாயிகள் தரமான பருத்தி விதைகளை (Cotton Seeds) பயன்படுத்தி அதிக மகசூல் பெற்று லாபம் பெறலாம் என கிருஷ்ணகிரி வேளாண்துறை யோசனை தெரிவித்துள்ளது.
பருத்தி விதைகள் (Cotton Seeds)
இது குறித்து கிருஷ்ணகிரி விதை பரிசோதனை நிலைய அலுவலர் க.லோகநாயகி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது பருவமழை பெய்துள்ள நிலையில் விவசாயிகள், விதைத்தேர்வில் கவனம் செலுத்த வேண்டியது மிக மிக அவசியம்.
-
இந்த மாவட்டத்தில் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, மத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் பருத்தி சாகுபடி மேற்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.
-
எனவே வீரிய பருத்தி மற்றும் பி.டி. ரக பருத்தி விதைகளை வாங்கும்போது விதை விற்பனை நிலையங்களில் இருந்து மட்டும் வாங்க வேண்டும்.
-
பிற மாநிலங்களில் இருந்து வாங்க நேர்ந்தாலும், உரிய விதை விற்பனை ரசீதுகளை கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
-
பருத்தி ரகத்தின் விவர அட்டையில் பயிர் செய்ய உகந்த பருவம் மற்றும் மாநிலம் போன்ற விவரங்களை சரி பார்த்து வாங்கவும்.
-
விதை முளைப்புத் திறன் அறிய விரும்பும் பட்சத்தில் விதை விபரங்களுடன் ஒரு மாதிரி ரூ.30 என்ற விகிதத்தில் வேளாண்மை அலுவலர், விதை பரிசோதனை நிலையம், ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலக வளாகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு அனுப்பி தரத்தை அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
மாற்றி யோசிக்க வைத்த மல்பெரி - விற்பனை செய்து வருமானம் பார்த்த விவசாயிகள்!
அதிக மகசூல் பெறத் துத்தநாகச் சத்து அவசியம்- வேளாண்துறை அறிவுறுத்தல்!