Farm Info

Sunday, 15 November 2020 06:40 AM , by: Elavarse Sivakumar

நடப்பாண்டு ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான நெல் விதைப்பு பருவத்துக்கான பயிர் காப்பீட்டு தொகையை செலுத்த நவம்பர் 30ம் தேதி கடைசி நாள் என ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

ராணிப்பேட்டையில் ஆட்சியர் ச. திவ்யதர்ஷினி தலைமையில் பயிர் குறித்த சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், நெல் சிறப்பு விதைப்பு பருவத்துக்கான பயிர் காப்பீடு கால அட்டவணை, பிரீமியத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி ஒரு ஏக்கருக்கு  பிரீமியத் தொகையாக ரூ.449 செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை செலுத்த நவம்பர் 30ம் தேதி கடைசி நாள் ஆகும். எனவே மாவட்டத்தில் உள்ள 7 வட்டார விவசாயிகளும் பதிவு செய்து பயன்பெறலாம்.

மேலும், கடன் பெறும், கடன் பெறா விவசாயிகளும் பதிவு செய்து பயன்பெறலாம். பொது இ-சேவை மையங்களிலும், அருகில் உள்ள கூட்டுறவு சங்கங்களிலும் இதற்கான பதிவுகள் மேற்கொள்ளப்படும். சிறப்பு விதைப்பு பருவம் என்பது ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான காலகட்டம்.

தேவைப்படும் ஆவணங்கள் (Documents)

  • ஆதார் அட்டை

  • அடங்கல்

  • பட்டா சிட்டா

  • வங்கிக் கணக்கு புத்தக நகல்

மேலும் விவரங்களுக்கு விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண் அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

தகவல்
ச. திவ்யதர்ஷினி
மாவட்ட ஆட்சியர்
ராணிப்பேட்டை

மேலும் படிக்க...

நிறைந்த லாபம் ஈட்ட நாட்டுக்கோழி வளர்ப்பு - மானியம் பெறஉடனே விண்ணப்பியுங்கள்!

அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில் மெத்தனம் - பட்டுக்கூடு உற்பத்தியாளா்கள் கவலை!

இந்த 10 ரூபாய் இருந்தால், அடிக்கப்போகிறது யோகம்- கொட்டப்போகிறது பணம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)