நெற்பயிருடன் சேர்த்து அசோலா (Azolla) வளர்ப்பதால் நெல் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதுடன் களைகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. நெற்பயிருடன் அதிகமாக குதிரைவாலி, வாசனாம்புல், மயில்கொன்றை மற்றும் அருகம்புல் வகை களை நிறைந்திருக்கும். கோரைவகை களைகளும், அம்மான் பச்சரிசி, வல்லாரை, நீர்மேல்நெருப்பு, கரிசிலாங்கண்ணி, நீர் புல், வழுக்கை புல் போன்ற அகன்ற இலைக் களைகளும் அதிகமாக வளரும்.
நாற்றங்காலில் களை நிர்வாகம்
நாற்றங்காலில் நெல் விதைத்த மூன்றாம் அல்லது நான்காம் நாளில் சிறிய அளவில் தண்ணீர் தேங்கியிருக்கும். களை முளைப்பதற்கு முன்பாக பிரிடில்லாகுளோர் சாட்னர் களைக்கொல்லியை எக்டேருக்கு 0.3 கிலோ தெளிக்க வேண்டும். நட்ட 8ம் நாள் எக்டேருக்கு 2 லிட்டர் பூட்டாகுளோர் அல்லது 2.5 லிட்டர் பென்டிமெத்தலினை 500 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.
இயந்திரக்களையெடுத்தல்
நடவு செய்தபின் 15 மற்றும் 25ம் நாளில் உருளைச் சக்கர களை (Weeds) எடுப்பான் மூலம் களைகளை அகற்றலாம். இதன் மூலம் வேர்ப்பகுதிக்கு ஆக்சிஜன் கிடைப்பதுடன் மகசூலும் அதிகரிக்கும். களை எடுக்கும் உள்ளீடு செலவும் குறையும்.
நடவு செய்த 3ம் நாள் எக்டேருக்கு 750 - 1000 கிராம் பென்டிமெத்தலின் தெளிப்பதன் மூலம் புல்வகை, அகன்ற இலை களைகளை கட்டுப்படுத்தலாம். விதைத்த 5 ம் நாள் அல்லது நடவு செய்த 10 ம் நாளில் iஎக்டேருக்கு 25 கிராம் பைரசோசல்பியூரான் தெளித்தால் கோரை மற்றும் அகன்ற இலை களைகளை கட்டுப்படுத்தலாம்.
நடவு செய்த 20 - 25 ம் நாளில் எக்டேருக்கு 2, 4 - டி.இ.இ. 750 - 1000 கிராம் தெளித்தால் கோரை மற்றும் அகன்ற இலை களைகளை கட்டுப்படுத்தலாம்.
முரளி அர்த்தனாரி
இணைப்பேராசிரியர்
சஞ்சீவன்,
உழவியல் இளநிலை ஆராய்ச்சியாளர் வேளாண்மைப் பல்கலை
கோவை.
0422 -661 1246
மேலும் படிக்க