கோவை மாவட்டம் அன்னூரின் சில பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்றும் திட்டத்தில் பயன்பெற வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி, விளைநிலமாக மாற்றும் பணிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
பொய்த்துப்போன மழை
இது தொடர்பாக அன்னூரின் சர்க்கார் சாமக்குளம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :
சர்க்கார் சாமக்குளம் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் வட்டாரங்களில், தரிசு நிலங்களை, விளைநிலங்களாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. போதிய மழைப்பொழிவு இல்லாததாலும், தொழிலாளர் பற்றாக்குறையாலும், விவசாய நிலங்களின் ஒரு பகுதி தரிசு நிலமாக மாறி வருகிறது.
மானியம்
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், தரிசு நிலங்களில் உள்ள முட்புதர்களை அகற்றுதல், சமப்படுத்துதல், உழவு செய்தல் ஆகிய பணிகளுக்கு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது,
நிலத்தில் சாகுபடி மேற்கொள்ள தேவையான விதை மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகளும், வேளாண் விரிவாக்க மையம் வாயிலாக மானிய விலையில் வழங்கப்படுகிறது.
தேவைப்படும் ஆவணங்கள்
தரிசு நில விவசாயிகள், சிட்டா, பட்டா, ஆதார் அட்டை நகல், அடங்கல், போட்டோ ஆகியவற்றுடன் சர்க்கார் சாமக்குளம் மற்றும் பெரிய நாயக்கன்பாளையம் வட்டார வேளாண் அலுவலகங்களை அணுகி இத்திட்டத்தில் பயன்பெறலாம்.இவ்வாறு, அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...