தேனீ, உங்கள் நண்பன்:
மலர்களிலிருந்து கிடைக்கும் மதுரமும், மகரந்தமும் தேனீக்களின் உணவாகும். இந்தியத் தாவரங்களில் மூன்றில் ஒரு பகுதி அயல் மகரந்தச் சேர்க்கைக்கு தேனீக்கள் உதவுகின்றன. தேனீக்களின் முக்கியத்துவம் முதல் இதன் பயன்கள் வரை விளக்கும் மாணவிகள்.
தேனிகளால் அதிக மகசூல் பெறும் தாவரங்கள்:
பயிர்கள், காப்பி, வெங்காயம், மொச்சை, சாத்துக்குடி, ஆப்பிள், சூரியகாந்தி.
அயல் மகரந்தச் சேர்க்கைக்கு தேனீக்கள் நம்பியுள்ள தாவரங்கள்:
பழவகைகள்:
ஆப்பிள், எலும்மிசை, திராட்சை, கொய்யா, மா, பப்பாளி, முந்திரி, பேரிக்காய், பிளம்ஸ், லிச்சி, பாதாம்.
காய்கறிப் பிரியர்கள்:
கேரட்,வெள்ளரி, வெங்காயம், முட்டைக் கோஸ்,காலி பிளவின்,நூல்கோல், முள்ளங்கி.
தீவனம் பயிர்கள்:
குதிரை மசால்
தேனீக்களின் சிறப்பு இயல்புகள்:
• தேனீக்கள் கூட்டங்கள் வாழும். ஒவ்வொரு கூட்டத்தில் 30,000 முதல் 40000 தேனீக்கள் இருக்கும்.
• சுமார் ¾ கி.மீ தூதரகத்தில் வாசனையையும் அறியும்.
• நீலம், பச்சை,செந்நீலம், மஞ்சள் பிடிக்கும்.
• சிவப்பு நிறத்தை அறியாது.
பெட்டியில் வளர்க்க ஏற்ற தேனீக்கள்:
இந்தியத் தேனீ,கொசுத் தேனீ, இத்தாலியன் தேனீ.
தேனீப் பெட்டி:
• பெட்டியில் இரு அறைகள் இருக்கும்.
1.கீழ் அறை — புழு அறை.
2.மேல் அறை — தேன் அறை.
மேலும் படிக்க: இந்த தொழில் தொடங்க, அரசு 85% மானியம் வழங்குகிறது
தேனீ பராமரிப்பு:
• மர நிழல் மலை அடிவாரம்.
• பூக்கள் நிறைந்த பகுதி.
• ஆட்கள் நடமாட்டம் அதிகமில்லாத பகுதி.
• ஒவ்வொரு பெட்டிக்கும்
• இடைவெளி 2மீட்டர்.
• இரவில் இடமாற்றம் செய்ய வேண்டும்.
தேனீ குடும்பம்:-
— இராணித் தேனீ.
— ஆண் தேனீ.
— பணித் தேனீ.
தேனின் இயற்பியல் பண்புகள்:
• தேன் ஒரு பிசுபிசுப்பான திரவம். தேனை சூடாக்குவது பாகுத்தன்மையை குறைக்கிறது.
தேனின் வாசனை மற்றும் சுவை
• இது பூவின் தேனில் இருந்து பெறப்படுகிறது.
• நீண்ட நேரம் சூடுபடுத்தப்பட்டாலோ அல்லது காற்றில் வெளிப்பட்டாலோ.
பயன்கள்:
• முக்கியமாக மெழுகுவர்த்தி தொழிலில் பயன்படுத்தப்படுகிறது.
• சீப்பு அடித்தளத் தாள்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது.
• குளிர் கிரீம்கள், உதட்டுச்சாயம் மற்றும் ரூஜ்கள் போன்ற அழகுசாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.
• மருந்து மற்றும் வாசனைத் தொழிலில் பயன்படுத்தப்படுகிறது (களிம்புகள், காப்ஸ்யூல்கள், மாத்திரை பூச்சு மற்றும் டியோடரண்டுகள்).
• வாட்டர் ப்ரூஃபிங்கிற்காக ஷூ பாலிஷ், பர்னிச்சர் போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்படுகிறது.
• பசைகள், மெல்லும் ஈறுகள் மற்றும் மைகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு:
செல்வி. சா.சகாயஜெயசீலி இளங்கலை வேளாண் மாணவி மற்றும் முனைவர் பா. குணா, இணைப் பேராசிரியர், நாளந்தா வேளாண்மைக் கல்லூரி, எம். ஆர். பாளையம், திருச்சி.
மின்னஞ்சல்: baluguna8789@gmail.com
தொலைபேசி எண் : 9944641459 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க:
மூலிகை தோட்டம் அமைக்க 50% மானியம்: செடிகள் முதல் குரோ பேக் வரை பெறலாம்!